எஃகுத்துறை அமைச்சகம்

எஃகு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

Posted On: 09 AUG 2024 3:48PM by PIB Chennai

எஃகு ஒரு ஒழுங்குபடுத்தப்படாத துறையாகும். எஃகுத் துறையின் வளர்ச்சிக்கு உகந்த கொள்கைச் சூழலை உருவாக்குவதன் மூலம் அரசு வசதி செய்து தரும் அமைப்பாக செயல்படுகிறது. தேசிய எஃகு கொள்கை  2017 2030-31 ஆம் ஆண்டில் பின்வரும் எஃகு உற்பத்தி/திறனை மதிப்பிட்டுள்ளது.

 

வரிசை எண்

அளவுரு

கணிப்புகள் (2030 - 31) (மில்லியன் டன்களில்)

 

மொத்த கச்சா எஃகு திறன்

300

 

மொத்த கச்சா எஃகு உற்பத்தி

255

 

மொத்த முடிக்கப்பட்ட எஃகு உற்பத்தி

230

ஆதாரம்: தேசிய எஃகு கொள்கை (NSP) 2017

 

நாட்டில் எஃகு உற்பத்தி மற்றும் நுகர்வை மேம்படுத்துவதற்கு உகந்த கொள்கைச் சூழலை உருவாக்க வசதி செய்து தரும் அமைப்பாக அரசு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது:-

 

  1. இந்தியாவில் தாயரிக்கப்படும்  எஃகை கொள்முதல் செய்யும்  வகையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரும்பு மற்றும் எஃகு பொருட்கள் ) கொள்கையை அமல்படுத்துதல்
  2. நாட்டிற்குள் 'சிறப்பு எஃகு' உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும், மூலதன முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் இறக்குமதியைக் குறைப்பதற்கும் சிறப்பு எஃகுக்கான உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பி.எல்.) திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. சிறப்பு எஃகுக்கான பிஎல்ஐ திட்டத்தின் கீழ் எதிர்பார்க்கப்படும் கூடுதல் முதலீடு ரூ. 29,500 கோடியாகும். மேலும் சிறப்பு எஃகுக்கான கூடுதல் திறன் சுமார் 25 மில்லியன் டன்னாக உருவாக்கப்படும்.
  3. இந்திய எஃகு உலகளவில் போட்டியிடுவதற்காக, மூலப்பொருளான ஃபெர்ரோ நிக்கல் மீதான அடிப்படை சுங்க வரி 2.5 சதவீதத்திலிருந்து பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளதுஅதே நேரத்தில் இரும்பு ஸ்கிராப் மீதான வரி விலக்கு 2024 பட்ஜெட்டில் 2026 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  4. இரும்பு மற்றும் எஃகு துறைக்கான கூடுதல் 16 பாதுகாப்பு வழிகாட்டுதல்களை எஃகு அமைச்சகம் 25.07.2024 அன்று வெளியிட்டுள்ளது. இவை செயல்முறை மற்றும் பணியிட அடிப்படையிலான பாதுகாப்பு இரண்டையும் உள்ளடக்குகின்றன. இவை வேலையிடப் பாதுகாப்பின் மூலம் விபத்துக்களைக் குறைப்பதுடன் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  5. எஃகு இறக்குமதி கண்காணிப்பு அமைப்பு (சிம்ஸ்) சீரமைக்கப்பட்டு, உள்நாட்டு எஃகு தொழிலின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக இறக்குமதியை மேலும் திறம்பட கண்காணிப்பதற்காக2.0 25.07.2024 அன்று சிம்ஸ் 2.0 தொடங்கப்பட்டது.
  6. ரயில்வே, பாதுகாப்பு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, வீட்டுவசதி, சிவில் விமானப் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சித் துறைகளைச் சேர்ந்த சாத்தியமான பயனீட்டாளர்களுடன் ஈடுபடுவதன் மூலம் 'இந்தியாவில் உற்பத்தி செய்வோம்' முன்முயற்சி மற்றும் பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டம் ஆகியவை எஃகு பயன்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன.
  7. எஃகு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் மிகவும் சாதகமான விதிமுறைகளில் கிடைப்பதற்கு வசதியாக அமைச்சகங்கள், மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல்.
  8. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஸ்கிராப் கிடைப்பதை அதிகரிக்க எஃகு ஸ்கிராப் மறுசுழற்சி கொள்கையை அறிவிக்கை.
  9. பொதுமக்களுக்கு தரமான எஃகு பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு இந்திய தரத்தின் கீழ் 145 எஃகு பொருட்களுக்கு தரக்கட்டுப்பாடு ஆணை அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.

 

எஃகு உற்பத்தியில் எரிசக்தி திறன்மிக்க மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களை பின்பற்றுவதற்காக அரசு கீழ்க்கண்ட முன்முயற்சிகளை எடுத்துள்ளது:

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE) பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கான தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தை அறிவித்துள்ளது. இந்த இயக்கத்தில் எஃகுத் துறையும் ஒரு பங்குதாரராக ஆக்கப்பட்டுள்ளது.

எஃகுத் துறையை கார்பன் நீக்கம் செய்வதற்கான பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்கும், பரிந்துரைப்பதற்கும் தொழில் துறை, கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்புகள், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் ஈடுபாட்டுடன் 14 பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

எரிசக்தி திறன் மேம்பாட்டுக்கான ஜப்பானின் புதிய எரிசக்தி மற்றும் தொழில்துறை தொழில்நுட்ப மேம்பாட்டுக் கழகத்தின்  மாதிரி திட்டங்கள் எஃகு ஆலைகளில் செயல்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்க கீழ்க்கண்ட நான்கு மாதிரி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

டாடா ஸ்டீல் லிமிடெட் நிறுவனத்தில் ஊது உலை சூடான அடுப்புகள் கழிவு வாயு மீட்பு அமைப்பு.

டாடா ஸ்டீல் லிமிடெட் நிறுவனத்தில் கோக் உலர் தணித்தல்.

ராஷ்ட்ரியா இஸ்பத் நிகாம் லிமிடெட்டில் சின்டர் கூலர் கழிவு வெப்ப மீட்பு அமைப்பு.

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் எரிசக்தி கண்காணிப்பு மற்றும் மேலாண்மை அமைப்பு

இரும்பு மற்றும் எஃகு துறையில் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி ஆய்வகங்கள் மற்றும் இந்திய எஃகு நிறுவனங்களுக்கு கீழ்க்கண்ட துறைகளில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக "இரும்பு மற்றும் எஃகு துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவித்தல்" என்ற திட்டத்தை எஃகு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

சக்தி செயல்திறனில் முன்னேற்றம்

காலநிலை மாற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைத்தல்

எஃகு பொருட்களின் தரத்தை மேம்படுத்துதல்

இரும்பு மற்றும் எஃகு தொழிற்துறை எதிர்கொள்ளும் தொழில்நுட்ப சிக்கல்களை நிவர்த்தி செய்தல்

உற்பத்தித் திறனை அதிகரிக்க இரும்புத் தாது, நிலக்கரி போன்ற இயற்கை வளங்களை வளப்படுத்துதல்

கழிவுகளின் பயன்பாடு

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் எஃகு மற்றும் கனரகத் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு பூபதி ராஜு சீனிவாச வர்மாஇந்தத் தகவலைத் தெரிவித்தார்.

*****

PKV/KPG/KR/DL



(Release ID: 2043827) Visitor Counter : 4


Read this release in: English , Urdu , Hindi