ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

யூரியா மானியத் திட்டம் கரீப் மற்றும் ராபி பருவங்களுக்கு பொருந்தும்

Posted On: 09 AUG 2024 1:48PM by PIB Chennai

மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் மத்திய அரசின் திட்டமான யூரியா மானியத் திட்டம் கரீப் மற்றும் ராபி பருவங்களுக்கு பொருந்தும். இத்திட்டத்திற்கு மத்திய அரசு வரவு செலவுத் திட்ட நிதியுதவி அளிக்கிறது. யூரியா மானியத் திட்டம் உள்நாட்டு யூரியா, இறக்குமதி யூரியா மற்றும் சீரான சரக்கு மானியம் என மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது. உள்நாட்டு யூரியா உற்பத்திக்காக உள்நாட்டு யூரியா அலகுகளுக்கு உள்நாட்டு யூரியா மானியம் வழங்கப்படுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட யூரியா மானியம் நாட்டின் மதிப்பிடப்பட்ட தேவைக்கும் உள்நாட்டு யூரியாவின் உற்பத்திக்கும் இடையிலான இடைவெளியை நிரப்புவதற்காக செய்யப்படும் இறக்குமதிக்கு திருப்பி விடப்படுகிறது. சீரான சரக்கு மானியக் கொள்கையின் கீழ் நாடு முழுவதும் யூரியாவைக் கொண்டு செல்வதற்கான சரக்கு மானியமும் இந்த இரண்டு கூறுகளிலும் அடங்கும்.

யூரியா மானியத் திட்டத்தின் கீழ், யூரியா தற்போது விவசாயிகளுக்கு சட்டப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையில் வழங்கப்படுகிறது. 45 கிலோ யூரியா மூட்டைக்கான அதிகபட்ச விலை மூட்டை ஒன்றுக்கு ரூ.242 (வேம்பு பூச்சு மற்றும் பொருந்தக்கூடிய வரிகள் நீங்கலாக). பண்ணை வாயிலில் வழங்கப்படும் யூரியாவின் விலைக்கும், யூரியா அலகுகள் வழங்கும் நிகர சந்தை வருவாய்க்கும் உள்ள வித்தியாசம் யூரியா உற்பத்தியாளர், இறக்குமதியாளருக்கு இந்திய அரசால் மானியமாக வழங்கப்படுகிறது. புதிய விலை நிர்ணயத் திட்டம், மாற்றியமைக்கப்பட்ட விலை நிர்ணயம் புதிய முதலீட்டுக் கொள்கை  2012 மற்றும் புதிய யூரியா கொள்கை  2015 ஆகியவற்றின் கீழ் தற்போது மானியம் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் யூரியா மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

----

PKV/KPG/KR/DL



(Release ID: 2043808) Visitor Counter : 6