சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மனநல சுகாதார சேவைகளை வலுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

Posted On: 09 AUG 2024 1:13PM by PIB Chennai

2016 ஆம் ஆண்டில் பெங்களூருவில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் மூலம் இந்தியாவின் தேசிய மனநல கணக்கெடுப்பை அரசு நடத்தியது, அதன்படி 18 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களில் மனநல கோளாறுகள் சுமார் 10.6% ஆக இருந்தது.

தேசிய மனநலத் திட்டத்தின் ஒரு பகுதியான மாவட்ட மனநலத் திட்டம் 767 மாவட்டங்களில் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக தற்கொலைத் தடுப்பு சேவைகள், பணியிட மன அழுத்த மேலாண்மை, வாழ்க்கைத் திறன் பயிற்சி, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆலோசனை வழங்குதல் உள்ளிட்ட நோக்கங்களுடன் தேசிய சுகாதார குழுமம் மூலம் மாநிலங்கள்,  யூனியன் பிரதேசங்களுக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது. மாவட்ட மருத்துவமனைகள், சமூக சுகாதார மையங்கள் (சி.எச்.சி) மற்றும் ஆரம்ப சுகாதார மையங்கள் (பி.எச்.சி) மட்டங்களில் டி.எம்.எச்.பியின் கீழ் கிடைக்கும் வசதிகளில் வெளிநோயாளர் சேவைகள், மதிப்பீடு, ஆலோசனை  உளவியல்-சமூக தலையீடுகள், கடுமையான மனநல குறைபாடுகள் உள்ளவர்களுக்கு தொடர்ச்சியான பராமரிப்பு மற்றும் ஆதரவு, மருந்துகள், தொலைதூர சேவைகள், ஆம்புலன்ஸ் சேவைகள் போன்றவை அடங்கும். மேற்கண்ட சேவைகளுடன் மாவட்ட அளவில் 10 படுக்கை வசதிகள் கொண்ட உள்நோயாளிகள் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், நாட்டில் மனநல சேவைகளின் திறனை மேம்படுத்த மத்திய அரசு தேசிய குடும்பத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தேசிய குடும்ப நலத் திட்டத்தின் உயர்நிலை கவனிப்பு கூறின் கீழ், முதுநிலை மனநல சிறப்புப் பிரிவுகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், உயர்நிலை சிகிச்சை வசதிகளை வழங்கவும் 25 ஒப்புயர்வு மையங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 19 அரசு மருத்துவக் கல்லூரிகள்  நிறுவனங்களில் மனநல சிறப்புப் பிரிவுகளில் 47 முதுநிலை துறைகளை நிறுவ  வலுப்படுத்த அரசு ஆதரவு அளித்துள்ளது. 22 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளில் மனநல சேவைகளும் வழங்கப்படுகின்றன.

நமக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி, நாட்டில் 47 அரசு நடத்தும் மனநல மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் 3 மத்திய மனநல நிறுவனங்கள், பெங்களூருவில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம், அஸ்ஸாமில் உள்ள தேஸ்பூரில் உள்ள மண்டல மனநல நிறுவனம் மற்றும் ராஞ்சியில் உள்ள மத்திய மனநல நிறுவனம் ஆகியவை அடங்கும்.

இவை தவிர, ஆரம்ப சுகாதார நிலையில் மனநல சுகாதார சேவைகளை வலுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 1.73 லட்சத்துக்கும் மேற்பட்ட துணை சுகாதார மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களை ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்களாக அரசு தரம் உயர்த்தியுள்ளது. இந்த ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்களில் வழங்கப்படும் விரிவான ஆரம்ப சுகாதார சேவையின் கீழ் வழங்கப்படும் சேவைகளின் தொகுப்பில் மனநல சேவைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

மேற்கூறியவற்றைத் தவிர, நாட்டில் தரமான மனநல ஆலோசனை மற்றும் பராமரிப்பு சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதற்காக 2022 அக்டோபர் 10 அன்று தேசிய தொலை மனநலத் திட்டம் ஒன்றை அரசு தொடங்கியுள்ளது. 23.07.2024 நிலவரப்படி, 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் 53 டெலி மனாஸ் பிரிவுகளை அமைத்து, டெலி மனநல சேவைகளைத் தொடங்கியுள்ளன. உதவி எண்ணில் 11,76,000 அழைப்புகள் கையாளப்பட்டுள்ளன.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு. பிரதாப்ராவ் ஜாதவ் இதனைத் தெரிவித்தார்.

---

PKV/KPG/KR/DL



(Release ID: 2043791) Visitor Counter : 5


Read this release in: English , Hindi , Hindi_MP , Manipuri