கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

78 நாடுகளுடன் கலாச்சார பரிமாற்ற திட்டத்தில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன

प्रविष्टि तिथि: 08 AUG 2024 2:03PM by PIB Chennai

இந்தியாவிற்கும், பிற நாடுகளுக்கும் இடையே, கலாச்சார உறவுகளை வளர்ப்பதற்கும் இந்திய கலை மற்றும் கலாச்சாரத்தை புதிய பகுதிகளில் பரப்புவதை கலாச்சார அமைச்சகம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இசை, நடனம், நாடகம், அருங்காட்சியகம் மற்றும் அறிவியல் அருங்காட்சியகங்கள், நூலகங்கள், ஆவணக் காப்பகங்கள், வரலாற்று நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்லியல் இடங்களைப் பாதுகாத்தல், இலக்கியம், ஆராய்ச்சி மற்றும் ஆவணப்படுத்துதல், விழாக்கள் மானுடவியல் போன்ற பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புக்காக 78 நாடுகளுடன் கலாச்சார பரிமாற்றத் திட்டங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

கலாச்சார பரிமாற்றத் திட்டங்களின் கீழ், பிற நாடுகளுடனான கூட்டாண்மை மற்றும் ஒத்துழைப்புக்காக, கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள பல்வேறு அமைப்புகளால் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2043021

***

IR/RS/KR/DL


(रिलीज़ आईडी: 2043292) आगंतुक पटल : 74
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP , Manipuri