பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
பழங்குடியின சமுதாயத்தினருக்கான பொருளாதார நடவடிக்கைகள்
Posted On:
08 AUG 2024 1:15PM by PIB Chennai
2019-20-ம் ஆண்டு முதல் பழங்குடியின சமுதாயத்தினர் உற்பத்தி செய்யும் பொருட்கள் ரூ.186 கோடி அளவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 3,958 வன் தன் வளர்ச்சி மையங்கள் மூலம் 11.83 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
பிரதமரின் பழங்குடியின வளர்ச்சி திட்டத்தின் கீழ், பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டு கூட்டமைப்பான ட்ரைபெஃட், பழங்குடியினரின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய பழங்குடியினர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் பழங்குடியினரின் பொருளாதார நடவடிக்கைகளை கணிசமான அளவுக்கு மேம்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் 8 வன் தன் வளர்ச்சி மையங்கள் செயல்படுகின்றன. இதன் மூலம் 2400 பேர் பயனடைகின்றனர். 95.5 லட்சம் ரூபாய் அளவுக்கு பழங்குடியினரின் உற்பத்திப் பொருட்கள் விற்பனையாகி உள்ளன.
நாடு முழுவதும் தேசிய பழங்குடியினர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மானியத்துடன் கூடிய ரூ.1577 கோடியை கடனாக வழங்கியுள்ளது. 2019-20-ம் ஆண்டில் வழங்கப்பட்ட இந்த கடன் மூலம் 3.24 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 2042995)
PKV/RR/KR
(Release ID: 2043072)
Visitor Counter : 50