நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
நடப்பு நிதியாண்டில் ஜூலை 31 வரை, 2.60 லட்சம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது
Posted On:
07 AUG 2024 6:09PM by PIB Chennai
2024, மே 4 முதல் வெங்காய ஏற்றுமதிதடையை அரசு நீக்கியுள்ளது. குறைந்தபட்ச ஏற்றுமதி விலை (MEP) ஒரு மெட்ரிக் டன்னுக்கு 550 டாலர் மற்றும் ஏற்றுமதி வரி 40% உடன் ஏற்றுமதி செய்ய அனுமதித்துள்ளது. 2024, ஜூலை 31 வரை, நடப்பு 2024-25-ம் நிதியாண்டில் மொத்தம் 2.60 லட்சம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுடன் (2023) ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டில் வெங்காய விவசாயிகளின் விலை வருவாய் மிகவும் அதிகமாக உள்ளது. மகாராஷ்டிராவில் வெங்காயத்தின் சராசரி மாதாந்திர மண்டி மாதிரி விலைகள் கடந்த ஆண்டு (2023) இதே காலகட்டத்தில் குவிண்டாலுக்கு ரூ.693 முதல் ரூ.1,205 வரை இருந்த நிலையில், 2014 ஏப்ரல் – ஜூலை மாதங்களுக்கிடையில் குவிண்டாலுக்கு ரூ.1,230 முதல் ரூ.2,578 வரை இருந்தது. நடப்பு ஆண்டில் வெங்காயத்தின் சராசரி கொள்முதல் விலை, குவிண்டாலுக்கு ரூ .2,833 ஆக இருந்தது, இது கடந்த ஆண்டு கொள்முதல் விலையான குவிண்டாலுக்கு ரூ .1,724 ஐ விட 64% அதிகமாகும்.
இந்தியா வெங்காயத்தின் நிகர ஏற்றுமதியாளராக உள்ளது மற்றும் ஏற்றுமதி மூலம் வருவாய் ஈட்டுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியா ஈட்டிய நிகர ஏற்றுமதி மதிப்பு 2021-22-ம் ஆண்டில் 3,326.99 கோடி ரூபாயாகவும், 2022-23-ம் ஆண்டில் 4,525.91 கோடி ரூபாயாகவும், 2023-24 ஆம் ஆண்டில் 3,513.22 கோடி ரூபாயாகவும் இருந்தது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்குஎழுத்து மூலம் அளித்த பதிலில், மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர் திரு பி.எல்.வர்மா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
(Release ID: 2042765)
IR/RS/KR
***
(Release ID: 2043066)
Visitor Counter : 52