உள்துறை அமைச்சகம்

போதைப்பொருள் தடுப்பு அமைப்பை மறுசீரமைத்தல் மற்றும் வலுப்படுத்துதல்

Posted On: 07 AUG 2024 4:54PM by PIB Chennai

போதைப்பொருள் தடுப்பு அமைப்பை வலுப்படுத்துவது என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். நாடு முழுவதும் அது பல்வேறு நடவடிக்கைகள் மூலம் விரிவுப்படுத்தப்படுகிறதுள

 

அமிர்தசரஸ், குவஹாத்தி, சென்னை மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் 4 மண்டல அலுவலகங்களைச் சேர்த்து மண்டல அலுவலகங்கள் 03 லிருந்து 07 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.

 

கோரக்பூர் (உத்தரப்பிரதேசம்), சிலிகுரி (மேற்கு வங்கம்), அகர்தலா (திரிபுரா), இட்டாநகர் (அருணாச்சல பிரதேசம்) மற்றும் ராய்ப்பூர் (சத்தீஸ்கர்) ஆகிய இடங்களில் புதிதாக 05 மண்டல அலுவலகங்கள் சேர்க்கப்பட்டதன் மூலமும், தற்போதுள்ள 12 துணை மண்டலங்களை மண்டலங்களாக தரம் உயர்த்தியதன் மூலமும் நாடு முழுவதும் மண்டல அலுவலகங்கள் 13 லிருந்து 30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.

 

பல்வேறு பிரிவுகளில் 425 புதிய பதவிகள் உருவாக்கப்பட்டதன் மூலம் போதைப்பொருள் தடுப்பு அமைப்பின் பணியாளர்களின் எண்ணிக்கை 1496 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்தார்.

 

***

 (Release ID: 2042686)



(Release ID: 2043060) Visitor Counter : 21