பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

பழங்குடி மொழிகளைப் பாதுகாத்தல்

Posted On: 08 AUG 2024 1:13PM by PIB Chennai

மத்திய அரசின் பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு பழங்குடி மொழிகள் மற்றும் பேச்சு வழக்குகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் / நடவடிக்கைகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது.

 

பழங்குடி மொழிகளில் இருமொழி அகராதிகள் மற்றும் மும்மொழித் தேர்ச்சி தொகுதிகள் தயாரித்தல், புதிய கல்விக் கொள்கை 2020 இன் வரிசையில் பன்மொழிக் கல்வி தலையீட்டின் கீழ் பழங்குடி மொழிகளில் முதல் 3 வகுப்பு மாணவர்களுக்கு தொடக்கப்பள்ளி பாடத்திட்டம் தயாரித்தல், பழங்குடி மொழிகளில் கதைகளை வெளியிடுதல், பழங்குடியின இலக்கியத்தை மேம்படுத்த பல்வேறு பழங்குடி மொழிகள் குறித்த புத்தகங்கள், இதழ்களை வெளியிடுதல், பழங்குடி நாட்டுப்புற பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் பல்வேறு பழங்குடியினரின் நாட்டுப்புறக் கதைகளை ஆவணப்படுத்துதல். பாடல்கள், விடுகதைகள், கதைப்பாடல்கள் போன்ற வாய்மொழி இலக்கியங்களைச் சேகரித்தல், அரிவாள் செல் இரத்த சோகை நோய்விழிப்புணர்வை ஏற்படுத்துதல்,   மாநாடுகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள், கவிதைக் கருத்தரங்குகள் போன்றவற்றை நடத்துதல் ஆகியவை இந்தத் திட்டங்களில் அடங்கும்.

 

இந்தத் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள், பழங்குடி சமூகங்கள் மாநாடுகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள் மற்றும் பரிமாற்ற திட்டங்களில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகின்றன. அரசு ஆசிரமப் பள்ளிகளின் ஆசிரியர்கள் அந்தந்த சமூகங்களைச் சேர்ந்த மொழி வல்லுநர்களுடன் இணைந்து பழங்குடி மொழிகளைப் பாதுகாப்பதுடன் மட்டுமல்லாமல், பழங்குடியின மாணவர்கள் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை அடிப்படைக் கற்றலில் உதவுவதோடு உயர் வகுப்புகளுக்குச் செல்லும்போது சுமூகமான மாற்றத்திற்கு உதவுவதிலும் பழங்குடி மொழிகளில் அகராதிகள் மற்றும் தொடக்கநிலைகளை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளனர்.

 

மேலும், புதிய கல்விக் கொள்கையில், சிறு குழந்தைகள் தங்கள் வீட்டு மொழி மற்றும் தாய்மொழியில் விரைவாக கற்றுக் கொள்ள வேண்டும். அதன்படி, கல்வியை வழங்குவதற்கும், மொழியைப் பாதுகாப்பதற்கும் மத்திய, மாநில அரசுகள் பன்மொழிக் கொள்கையை ஊக்குவித்து வருகின்றன.

 

கல்வி அமைச்சகம் தெரிவித்தபடி, மைசூருவில் உள்ள இந்திய மொழிகளின் மத்திய நிறுவனத்தின் (சிஐஐஎல்) கீழ் 2013 ஆம் ஆண்டில் அமைச்சகம் மொழிகளின் பாதுகாப்புத் திட்டத்தை தொடங்கியது. 10,000க்கும் குறைவான மக்களால் பேசப்படும் இந்தியாவின் தாய்மொழிகளை இந்த வகையில் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

 

பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் வருடாந்திர கருத்துருவின் அடிப்படையில், 'பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு ஆதரவளித்தல்' திட்டத்தின் கீழ், திட்டங்கள் / செயல்பாடுகளுக்கு உயர்மட்டக் குழு ஒப்புதல் அளிக்கிறது.

 

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை இணையமைச்சர் திரு. துர்காதாஸ் உய்கே இதனைத் தெரிவித்தார்.

 

***

(Release ID: 2042993)

PKV/RR/KR



(Release ID: 2043011) Visitor Counter : 52