கூட்டுறவு அமைச்சகம்

நந்தினி கூட்டுறவு திட்டம்

Posted On: 07 AUG 2024 4:53PM by PIB Chennai

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் நந்தினி கூட்டுறவு திட்டம் என்பது நிதி உதவி, திட்ட உருவாக்கம், திறன் மேம்பாடு ஆகியவற்றில் பெண்களை மையமாகக் கொண்ட கட்டமைப்பாகும், இது கழகத்தின் கீழ் வணிக மாதிரி அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள மகளிர் கூட்டுறவுகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மகளிர் கூட்டுறவுகளின் திட்டங்களுக்கு நிதி உதவி வழங்குவதில் குறைந்தபட்ச அல்லது அதிகபட்ச வரம்பு இல்லை.

 

பிரதமரால் கோடிட்டுக் காட்டப்பட்ட தற்சார்பு இந்தியா  கொள்கைகளுடன் தன்னை சீரமைக்கும் நோக்கத்துடன் நந்தினி கூட்டுறவு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் பெண்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான ஒரு கட்டமைப்பாகும். மகளிர் கூட்டுறவுகள் மூலம் மகளிரின் தொழில் முனைவோர் ஆற்றலுக்கு இது துணைபுரிகிறது. இது பெண்களுக்கான தொழில்முனைவு, வணிகத் திட்ட உருவாக்கம், திறன் மேம்பாடு, கடன் மற்றும் மானியம் மற்றும் பிற திட்டங்களுக்கான வட்டி மானியம் ஆகியவற்றின் முக்கிய உள்ளீடுகளை ஒருங்கிணைக்கிறது.

 

தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தின் நிதியுதவி திட்ட அடிப்படையிலானது. நந்தினி கூட்டுறவு திட்டத்தின் கீழ் பீகாரில் உள்ள எந்தவொரு மகளிர் கூட்டுறவு நிறுவனத்திடமிருந்தும் இதுவரை எந்த முன்மொழிவும் பெறப்படவில்லை. இருப்பினும், ஒட்டுமொத்தமாக 31.03.2024 நிலவரப்படி, நாடு முழுவதும் பெண்களால் மட்டுமே உருவாக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்களின் வளர்ச்சிக்காக தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் ரூ.6426.36 கோடி நிதியுதவிகளை வழங்கியுள்ளது.

 

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இதனைத் தெரிவித்தார்.

***

(Release ID: 2042682)
PKV/RR/KR



(Release ID: 2042980) Visitor Counter : 9


Read this release in: English , Urdu , Hindi , Bengali