பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
பஞ்சாயத்துகளில் ஒருங்கிணைந்த கட்டண இடைமுக வசதி
प्रविष्टि तिथि:
07 AUG 2024 4:51PM by PIB Chennai
இன்றைய நிலவரப்படி, 1,73,060 பஞ்சாயத்துகளில் ஒருங்கிணைந்த கட்டண இடைமுக (யு.பி.ஐ) வசதி செய்து தரப்பட்டு, டிஜிட்டல் முறையில் பணம் வசூலிக்கப்படுகிறது.
யு.பி.ஐ இயங்குதளமானது, குடிமக்கள் தங்கள் அவர்களின் யு.பி.ஐ-யுடன் இணைக்க வசதியான மற்றும் அணுகக்கூடிய வழியையும் வழங்குகிறது, இது தடையற்ற பரிவர்த்தனைகள் மற்றும் நிதி உள்ளடக்கத்தை செயல்படுத்துகிறது. யு.பி.ஐ-இன் பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம், குடிமக்கள் தங்கள் கணக்குகளை எளிதாக அணுகலாம், பரிவர்த்தனைகளை செய்யலாம் மற்றும் பிரதமரின் மக்கள் வங்கி கணக்கு திட்டத்தின் மூலம் ரூபே காப்பீடு போன்ற பலன்களைப் பெறலாம். இந்த நெறிப்படுத்தப்பட்ட அணுகுமுறை, கிராமப்புற குடிமக்களை அரசால் வழங்கப்படும் நிதிச் சேவைகள் மற்றும் காப்பீட்டு சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கிறது, இறுதியில் கிராமப்புற மக்களிடையே நிதி அதிகாரம் மற்றும் பாதுகாப்பை வளர்க்கிறது.
கிராமப்புற குடிமக்கள் இப்போது சொத்து வரி, குடிநீர் வரி, தெருவிளக்கு வரி, வர்த்தக உரிமக் கட்டணம் ஆகியவற்றுடன் வரி மற்றும் வரி அல்லாத செலுத்துதல்களைச் செய்யலாம்; கட்டிட அனுமதி கட்டணம்; மனைப்பிரிவு ஒப்புதல் கட்டணம் போன்றவை டிஜிட்டல் முறையில் வழங்கப்படுவதன் மூலம் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் நிதி திறன்கள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் வலிமைப் பெறும்.
மத்திய நிதிக்குழு மானியங்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ராஷ்டிரிய கிராம ஸ்வராஜ் திட்டம் மூலம் மாநிலங்களின் முயற்சிகளுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் துணைபுரிகிறது. இந்தத் திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் செயல்பாட்டாளர்களின் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சிக்கு மாநிலங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குகிறது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய பஞ்சாயத்து ராஜ்துறை இணையமைச்சர் பேராசிரியர் எஸ்.பி. சிங் பாகேல் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
BR/KR
***
(रिलीज़ आईडी: 2042975)
आगंतुक पटल : 96