உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சைபர் தடயவியல் ஆய்வகங்கள்

Posted On: 07 AUG 2024 4:49PM by PIB Chennai

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு அவற்றின் திறன் மேம்பாட்டிற்காக 'பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் கிரைம் தடுப்பு' திட்டத்தின் கீழ் உள்துறை அமைச்சகம் நிதி உதவி வழங்கியுள்ளது. இதுவரை, 33 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் சைபர் தடயவியல் மற்றும் பயிற்சி ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

டிஜிட்டல் மோசடி / சைபர் தடயவியல் தொடர்பான முக்கியமான வழக்குகளை விசாரிக்க ஹைதராபாத்தில் உள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தில் தேசிய சைபர் தடயவியல் ஆய்வகம் (என்.சி.எஃப்.எல்) அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகம் நாட்டிலுள்ள மத்திய மற்றும் மாநில தடய அறிவியல் ஆய்வகங்களுக்கு மாதிரி ஆய்வுக்கூடமாக செயல்படுகிறது. மேலும், தில்லி, சண்டிகர், கொல்கத்தா, குவஹாத்தி, போபால் மற்றும் புனேவில் அமைந்துள்ள   மத்திய தடய அறிவியல் ஆய்வகங்களில் 06 என்.சி.எஃப்.எல்-களை நிறுவுவதற்காக "பெண்களின் பாதுகாப்பு" என்ற திட்டத்தின் கீழ் ரூ.126.84 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தடயவியல் திறன்களை நவீனப்படுத்தும் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, இணையதள தடயவியல் உள்ளிட்ட நவீன இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுடன் கூடிய உயர்தர தடய அறிவியல் வசதிகளை மேம்படுத்த மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு உதவி கிடைக்கிறது. ஹைதராபாத்தில் உள்ள என்.சி.எஃப்.எல், சைபர் கிரைம் தொடர்பான ஆதாரங்களின் வழக்குகளில் தேவையான தடயவியல் ஆதரவை வழங்குகிறது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு. பண்டி சஞ்சய் குமார் இதனைத் தெரிவித்தார்.

 

BR/KR

 

***

 


(Release ID: 2042960) Visitor Counter : 41


Read this release in: English , Urdu , Hindi , Telugu