நிலக்கரி அமைச்சகம்
உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி
Posted On:
07 AUG 2024 4:17PM by PIB Chennai
2019 முதல் மாநில வாரியான மற்றும் ஆண்டு வாரியான நிலக்கரி உற்பத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது-
[எண்ணிக்கை மில்லியன் டன் (MT)]
மாநிலம் / ஆண்டு
|
2019-20
|
2020-21
|
2021-22
|
2022-23
|
2023-24*
|
அசாம்
|
0.517
|
0.036
|
0.028
|
0.200
|
0.200
|
சத்தீஸ்கர்
|
157.745
|
158.41
|
154.120
|
184.895
|
207.255
|
ஜம்மு & காஷ்மீர்
|
0.014
|
0.010
|
0.011
|
0.010
|
0.012
|
ஜார்க்கண்ட்
|
131.763
|
123.428
|
130.104
|
156.483
|
191.158
|
மத்தியப் பிரதேசம்
|
125.726
|
132.531
|
137.975
|
146.029
|
159.227
|
மகாராஷ்டிரா
|
54.746
|
47.435
|
56.528
|
63.620
|
69.282
|
ஒடிசா
|
143.016
|
154.151
|
185.069
|
218.981
|
239.402
|
தெலுங்கானா
|
65.703
|
52.603
|
67.233
|
69.637
|
72.521
|
உத்தரப் பிரதேசம்
|
18.030
|
17.016
|
18.073
|
20.540
|
21.510
|
மேற்கு வங்காளம்
|
33.614
|
30.463
|
29.069
|
32.796
|
37.261
|
மொத்தம்
|
730.874
|
716.083
|
778.21
|
893.191
|
997.828
|
* தற்காலிக எண்ணிக்கை
நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க அரசு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது:
1. நிலக்கரி சுரங்கங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்த நிலக்கரி அமைச்சகத்தின் வழக்கமான ஆய்வுகள்.
சுரங்க உரிமையாளர்கள் (அணு கனிமங்கள் தவிர) தங்கள் வருடாந்திர கனிம உற்பத்தியில் (நிலக்கரி உட்பட) 50% வரை வெளிச்சந்தையில் விற்க வகை செய்யும் வகையில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், 2021 இயற்றுதல்.
நிலக்கரி சுரங்கங்களின் செயல்பாட்டை விரைவுபடுத்த நிலக்கரித் துறைக்கான ஒற்றைச் சாளர அனுமதி போர்ட்டல்.
நிலக்கரி சுரங்கங்களை விரைவில் இயக்குவதற்கு பல்வேறு ஒப்புதல்கள் / அனுமதிகளைப் பெறுவதற்காக நிலக்கரி தொகுதி ஒதுக்கீடுதாரர்களுக்கு கைகொடுப்பதற்கான திட்ட கண்காணிப்பு பிரிவு.
வருவாய் பகிர்வு அடிப்படையில் வணிக ரீதியான சுரங்க ஏலம் 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வணிக ரீதியான சுரங்கத் திட்டத்தின் கீழ், திட்டமிடப்பட்ட உற்பத்தி தேதிக்கு முன்னதாக உற்பத்தி செய்யப்பட்ட நிலக்கரியின் அளவிற்கு இறுதி சலுகையில் 50% தள்ளுபடி அனுமதிக்கப்படுகிறது. மேலும், நிலக்கரி வாயுவாக்கம் அல்லது திரவமாக்கல் (இறுதி சலுகையில் 50% தள்ளுபடி) மீதான ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
6. வணிக ரீதியிலான நிலக்கரி சுரங்கத்திற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மிகவும் தாராளமாக உள்ளன. நிலக்கரி பயன்பாட்டிற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. புதிய நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்க அனுமதித்தல், முன்பணத் தொகையைக் குறைத்தல், மாதாந்திர கட்டணத்திற்கு ஈடாக முன்பணத் தொகையை சரிசெய்தல், நிலக்கரி சுரங்கங்களை இயக்குவதற்கான நெகிழ்வுத்தன்மையை ஊக்குவிக்க தாராளமான செயல்திறன் அளவுருக்கள், வெளிப்படையான ஏல செயல்முறை, தானியங்கி வழி மூலம் 100% அந்நிய நேரடி முதலீடு (எஃப்.டி.ஐ) மற்றும் தேசிய நிலக்கரி குறியீட்டின் அடிப்படையில் வருவாய் பகிர்வு மாதிரி ஆகியவை உள்ளன.
இவை தவிர, உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க நிலக்கரி நிறுவனங்களும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன:
தற்போதைய இறக்குமதிக் கொள்கையின்படி, நிலக்கரி திறந்த பொது உரிமத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளது மற்றும் பொருந்தக்கூடிய தீர்வையை செலுத்துவதன் மூலம் நுகர்வோர் தங்கள் ஒப்பந்த விலைகளின்படி தங்கள் விருப்பப்படி நிலக்கரியை இறக்குமதி செய்யலாம்.
மின் தேவையை பூர்த்தி செய்யவும், நாடு முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யவும், உள்நாட்டு நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களில் போதுமான நிலக்கரி இருப்புக்களை பராமரிக்கவும், 04.03.2024 தேதியிட்ட ஆலோசனையை 15.10.2024 வரை நீட்டிக்குமாறு மின் அமைச்சகம் 27.06.2024 அன்று ஆலோசனை வழங்கியுள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு. ஜி. கிஷன் ரெட்டி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2042652)
PKV/RR/KR
(Release ID: 2042956)
Visitor Counter : 50