சுரங்கங்கள் அமைச்சகம்
டான்டலம் படிவுகள்
Posted On:
07 AUG 2024 3:36PM by PIB Chennai
எம்.எம்.டி.ஆர் சட்டம், 1957 முதல் அட்டவணையின் பகுதி டி யில் டான்டலம் உட்பட 24 கனிமங்களின் பட்டியலை மத்திய அரசு முக்கியமான கனிமங்களாக அறிவித்துள்ளது.
சுரங்க அமைச்சகத்துடன் இணைக்கப்பட்ட இந்திய புவியியல் ஆய்வு மையம் (ஜி.எஸ்.ஐ), டான்டலம் உள்ளிட்ட முக்கியமான கனிமங்களை ஆய்வு செய்வதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. 2021-22 முதல் 2024-25 வரை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் டான்டலம் மற்றும் அதனுடன் தொடர்புடைய கனிமங்களை ஆய்வு செய்வதற்கான 6 திட்டங்களை ஜி.எஸ்.ஐ மேற்கொண்டுள்ளது.
டான்டலம் உள்ளிட்ட முக்கிய கனிமங்களின் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தும் வகையில், அவற்றின் தாதுக்கள் மற்றும் செறிவுகள் மற்றும் தயாரிக்கப்படாத டான்டலம் மீதான சுங்க வரி நீக்கம் குறித்து மத்திய பட்ஜெட் 2024-25 இல் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு. ஜி. கிஷன் ரெட்டி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2042603
BR/KR
***
(Release ID: 2042952)
Visitor Counter : 43