புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
நீர் மின் சக்தி திட்டங்கள்
Posted On:
07 AUG 2024 3:43PM by PIB Chennai
சிறிய நீர்மின் திட்டங்களை (25 மெகாவொட் வரை) முறையாக அமைப்பதற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத:துள்ளது.
2016 ஆம் ஆண்டில் ரூர்க்கியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தால் சிறிய நீர்மின் திறன் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. இந்த அறிக்கையின்படி, சாத்தியமான இடங்களிலிருந்து 21133 மெகாவாட் சிறிய புனல் மின் உற்பத்தி திறன் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஓடுதளம், கால்வாய் அடிப்படையிலான மற்றும் அணைக்கட்டு திட்டங்களுக்கு இந்த திறன் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
சிறு புனல் மின் திட்டங்கள் நீர் வெளியேற்றம் மற்றும் குறிப்பிட்ட இடத்தின் அடிப்படையில் அமைக்கப்படும். எனவே, இந்த அமைச்சகம் 27 திட்டங்களை உருவாக்கியுள்ளது. 2013-14 ஆம் ஆண்டில் ரூர்க்கியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தை ஈடுபடுத்தி சிறிய நீர்மின் திட்டங்களை முறையாக மேம்படுத்தி உள்ளது.
25 மெகாவாட்டிற்கு மேற்பட்ட புனல் மின் திட்டங்களுக்கு பின்வரும் காரணிகளை கருத்தில் கொண்டு 2017-23 ஆம் ஆண்டில் மத்திய மின்சார ஆணையத்தால் மறுமதிப்பீட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
· ஆற்று வடிநிலத்தின் உகந்த பயன்பாட்டினை உறுதி செய்தல்
· போதுமான தலை கிடைப்பது
· போதுமான நீரியல் இருப்பு
இந்த மதிப்பீட்டின்படி, நாட்டின் நீர்மின் ஆற்றல் (25 மெகாவாட்டுக்கு மேல்) சுமார் 133 ஜிகாவாட் ஆகும்.
சிறிய நீர்மின் திட்டங்களை அமைக்க விரும்பும் மக்களுக்கு மானியம் வழங்குவதற்கு தற்போது சிறிய நீர்மின்சக்தித் திட்டம் எதுவும் இல்லை. இருப்பினும், பல்வேறு திட்டங்களின் கீழ் சூரிய மின்சக்தி திட்டங்களை செயல்படுத்த வழங்கப்படுகிறது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் திரு. ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2042617)
PKV/RR/KR
(Release ID: 2042945)
Visitor Counter : 52