மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
பாரம்பரிய மீனவர்களுக்கு நிதியுதவி
Posted On:
07 AUG 2024 4:27PM by PIB Chennai
மத்திய அரசின் மீன்வளத்துறை பாரம்பரிய மீனவர்களுக்காக 2015-2020-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட நீலப்புரட்சி: ஒருங்கிணைந்த மீன்வள மேம்பாடு மற்றும் மேலாண்மை என்ற மத்திய அரசு நிதியுதவித் திட்டத்தில், மொத்தம் 918 ஆழ்கடல் மீன்பிடி படகுகளை வாங்குவதற்காக, கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 734.40 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதைத் தொடர்ந்து, மத்திய அரசின் மீன்வளத் துறை, 5 ஆண்டு காலத்திற்கு (2020-2025) ரூ.20050 கோடி முதலீட்டுடன், இந்தியாவில், மீன்வளத் துறையில் நிலையான மற்றும் பொறுப்பான வளர்ச்சியின் மூலம் நீலப் புரட்சியைக் கொண்டுவரும் தொலைநோக்குடன், பிரதமரின் மீனவள மேம்பாட்டுத் திட்டம் என்ற முன்னோடித் திட்டத்தைத் தொடங்கியது. இத்திட்டம் மற்ற துறைகளுக்கிடையே, பாரம்பரிய மீனவர்களால் ஆழ்கடல் மீன்பிடி கலன்களை ரூ.1.20 கோடி அலகுத் தொகையில் வாங்குவதற்கும், தற்போதுள்ள மீன்பிடி கலன்களை ஏற்றுமதிக்கு ஏற்றவாறு மேம்படுத்துவதற்கும் ரூ.15 இலட்சம் அலகுத் தொகையில் நிதியுதவி அளிக்கிறது. இதில் பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியமும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பெண்களுக்கு 60 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் மீன்வளத்துறை, பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் (2021-22 முதல் 2023-24 வரை) பாரம்பரிய மீனவர்களால் 349 ஆழ்கடல் மீன்பிடி கலன்களை வாங்குவதற்கும், ஏற்றுமதிக்கு தகுதியான தற்போதுள்ள 903 மீன்பிடி கலன்களை மேம்படுத்துவதற்கும் ரூ.554.25 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
----
MM/KPG/DL
(Release ID: 2042850)
Visitor Counter : 44