சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
பொலிவுறு போக்குவரத்து மேலாண்மை அமைப்பு
Posted On:
07 AUG 2024 1:03PM by PIB Chennai
ஆகஸ்ட் 2019-ல் இயற்றப்பட்ட மோட்டார் வாகன (திருத்த) சட்டம், 2019-ன்படி, தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், சாலைகள் அல்லது மத்திய அரசு நிர்ணயித்த வரம்புகள் வரை மக்கள் தொகை கொண்ட மாநிலத்திலுள்ள எந்தவொரு நகரத்திலும், மின்னணு கண்காணிப்பு மற்றும் சாலைப் பாதுகாப்பை அமல்படுத்துவதற்கு வகை செய்கிறது. அதன்படி, தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் இந்தியாவின் மில்லியனுக்கும் அதிகமான நகரங்களில் உள்ள முக்கியமான சந்திப்புகள் மற்றும் தேசிய தூய்மையான காற்று திட்டத்தின் (NCAP) கீழ் உள்ள நகரங்களில் அதிக ஆபத்து மற்றும் அதிக அடர்த்தி கொண்ட தொழில் வழித்தடங்களில் சாலைப் பாதுகாப்புக்கான மின்னணு கண்காணிப்பு மற்றும் அமலாக்கத்திற்கான விதிகளை அமைச்சகம் ஆகஸ்ட் 2021-ல் வெளியிட்டுள்ளது. இந்த விதியின் நோக்கத்திற்காக, மின்னணு அமலாக்க சாதனம் என்பது வேக கேமரா, மூடிய சுற்று தொலைக்காட்சி கேமரா, வேக துப்பாக்கி, உடல் அணியக்கூடிய கேமரா, டாஷ்போர்டு கேமரா, தானியங்கி நம்பர் பிளேட் அங்கீகாரம் (ஏஎன்பிஆர்), எடைபோடும் இயந்திரம் (WIM) மற்றும் மாநில அரசால் குறிப்பிடப்பட்ட வேறு எந்த தொழில்நுட்பத்தையும் குறிக்கிறது.
அதிக போக்குவரத்து அடர்த்தி கொண்ட தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் டெல்லி-மீரட் விரைவுச் சாலை, டிரான்ஸ் ஹரியானா, கிழக்கு புறவழி விரைவுச் சாலை போன்ற தேசிய விரைவுச் சாலைகளில், மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்பு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) நிறுவப்பட்டுள்ளது. மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்பில், பல்வேறு மின்னணு அமலாக்கக் கருவிகளுக்கான ஏற்பாடுகள் உள்ளன. இதன் மூலம் நெடுஞ்சாலைகளில் நிகழும் சம்பவங்களை விரைந்து அடையாளம் காணவும், நெடுஞ்சாலைகளை திறம்பட கண்காணிக்கவும் உதவுகிறது.
மேலும், 10.10.2023 அன்று நிலையான அதி நவீன போக்குவரத்து மேலாண்மை நடைமுறை (ATMS) ஆவணத்தை, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திருத்தியுள்ளது. இது அதி நவீன போக்குவரத்து மேலாண்மை நடைமுறை தீர்வு மற்றும் அதன் துணை அமைப்புகளான வீடியோ கண்காணிப்பு அமைப்பு, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வீடியோ சம்பவம் கண்டறிதல் மற்றும் அமலாக்க அமைப்பு போன்றவற்றின் செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப விவரக்குறிப்புகளை வழங்குகிறது. வீடியோ சம்பவம் கண்டறிதல் மற்றும் அமலாக்க அமைப்பு மூலம் அமலாக்க முகமைகளால் அடிப்படையிலான மின்-சலான் செயல்படுத்துதல், ராஜ்மார்க் யாத்ரா, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒன் ஆகியவற்றுடன் ஒருங்கிணைத்தல், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அலுவலகங்கள் மற்றும் அமலாக்க முகமைகளுக்கு, நேரடி கேமரா பதிவுகளை வழங்குதல் போன்ற விதிகளையும் இந்த ஆவணம் வழங்குகிறது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிக அடர்த்தி மற்றும் அதிவேக வழித்தடங்களில் அமைக்கப்படும் புதிய தேசிய நெடுஞ்சாலை திட்டங்களில், தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் நிறுவுவது, பொதுவாக திட்டத்தின் ஒரு பகுதியாகும். மேலும், ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள முக்கிய வழித்தடங்களில் தானியங்கித் திட்டமாக, தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
----
MM/KPG/KR/DL
(Release ID: 2042701)
Visitor Counter : 51