திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
நாடு முழுவதும் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது
Posted On:
07 AUG 2024 2:03PM by PIB Chennai
நாடு முழுவதும் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், தேசிய தொழில் முனைவோர் மற்றும் சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் குவஹாத்தியில் உள்ள இந்திய தொழில்முனைவோர் நிறுவனம் மூலம் நாடு முழுவதும் உள்ள பெண் தொழில்முனைவோருக்கு அதிகாரமளித்தல் மேம்பாட்டிற்காக பணியாற்றி வருகிறது. தேசிய தொழில் முனைவோர் மற்றும் சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் குவஹாத்தியில் உள்ள இந்திய தொழில் முனைவோர் நிறுவனம் ஆகியவை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
2021-24 ம் ஆண்டில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான திறன் கையகப்படுத்தல் மற்றும் அறிவு விழிப்புணர்வு (சங்கல்ப்) திட்டத்தின் ஆதரவுடன் விளிம்புநிலை மக்கள் உட்பட சமூகத்தின் பல்வேறு பிரிவுகளிடையே தொழில்முனைவோர் சூழலை வலுப்படுத்துவதற்கான திட்டத்தை தேசிய தொழில்முனைவோர் மற்றும் சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனம் செயல்படுத்தியுள்ளது, இதில் 32,262 பெண்கள் (மொத்த பயனாளிகளில் 67%) பங்கேற்றனர்.
தொழில்முனைவோர் மற்றும் வாழ்க்கைத் திறன்கள் குறித்த பயிற்சியாளர்கள் பயிற்சித் திட்டம் 2022-23 ம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டது, இதில் மொத்தம் 3883 பெண்கள் (மொத்த பயனாளிகளில் 78%) பங்கேற்றனர்.
பெண்களால் தொடங்கப்பட்ட நிறுவனங்களுக்காக மத்திய அரசு பல்வேறு சிறப்பு தொழில் காப்பக மையங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது:
பெண்கள் தலைமையிலான புத்தொழில் நிறுவனங்களுக்கு சமபங்கு மற்றும் கடன் இரண்டையும் ஊக்குவிப்பதற்காக, இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (சிட்பி) செயல்படுத்தும் புத்தொழில் நிறுவனங்களுக்கான நிதி திட்டத்தில் 10% பெண்கள் தலைமையிலான புத்தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
புத்தொழில் இந்தியா இணைய தளத்தில் பெண் தொழில்முனைவோர்களுக்காக ஒரு வலைப்பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பக்கத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பெண் தொழில்முனைவோருக்கான பல்வேறு கொள்கை நடவடிக்கைகள் உள்ளன.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. ஜெயந்த் சவுத்ரி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2042546
***
(Release ID: 2042546)
IR/KV/KR
(Release ID: 2042669)
Visitor Counter : 72