சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

பசுமை நெடுஞ்சாலை கொள்கை

Posted On: 07 AUG 2024 1:04PM by PIB Chennai

பசுமை நெடுஞ்சாலை கொள்கை (மரம் நடுதல், நடவு செய்தல், அழகுபடுத்துதல் மற்றும் பராமரித்தல்) 2015-ன் நோக்கங்கள் பின்வருமாறு

தேசிய நெடுஞ்சாலைகளில் மரக்கன்றுகள் நடுவதற்கான கொள்கை கட்டமைப்பை உருவாக்குதல்.

காற்று மாசுபாடு மற்றும் தூசியின் தாக்கத்தை குறைக்க மரங்கள் மற்றும் புதர்கள, காற்று மாசுபாட்டிற்கான இயற்கை மடுவாக அறியப்படுகின்றன.

கோடை காலத்தில் வெயில் கொளுத்தும் சாலைகளில் நிழல் தர வேண்டும்.

வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பின் காரணமாக, தொடர்ந்து அதிகரித்து வரும் ஒலி மாசுபாட்டின் தாக்கத்தைக் குறைத்தல்;

கரையின் சரிவுகளில் மண் அரிப்பைத் தடுக்க.

உள்ளே வரும் வாகனங்களின் ஹெட்லைட்டிலிருந்து கண்ணை கூசுவதைத் தடுக்க.

காற்று மற்றும் உள்வரும் கதிர்வீச்சின் விளைவை மிதப்படுத்துதல்.

உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பசுமை நெடுஞ்சாலை கொள்கை 2015ன்படி, இதுவரை 402.28 இலட்சம் மரக்கன்றுகளை தேசிய நெடுஞ்சாலைகளில் வெற்றிகரமாக நட்டுள்ளது.

சுய உதவிக் குழுக்கள், தனியார் நிறுவனங்கள், மாநில வனத்துறை, வனத் தோட்டக் கழகங்கள் மற்றும் வனத்துறை மற்றும் ஒப்பந்ததாரர்களால் அனுமதிக்கப்பட்ட வரம்பின்படி மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தில்,  மரக்கன்று நடுவதற்கென தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு கழகம் மற்றும் சாலைப் போக்குவரத்து நிறுவனத்தில் உள்ள இதர முகமைகள் மூலம், மரம் நடுதல், தோட்ட விரிவாக்கப் பணிகளை திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த அமைச்சகம் தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் முதன்மையான பொறுப்பாகும். இருப்பினும், தேசிய நெடுஞ்சாலைகள் தவிர்த்த பிற மாநிலங்கள் தொடர்பான கொள்கைகள் அவர்களிடமே உள்ளன.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

----

(Release ID 2042496)

MM/KPG/KR



(Release ID: 2042660) Visitor Counter : 34


Read this release in: English , Urdu , Hindi , Punjabi