திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திறன் மேம்பாட்டு பயிற்சியை ஊக்குவிப்பதற்கான முயற்சிகள்
Posted On:
07 AUG 2024 2:06PM by PIB Chennai
சிறு மற்றும் உள்ளூர் தொழில் முனைவோர் உட்பட சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமும் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திறன் மேம்பாட்டு பயிற்சியை ஊக்குவிக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் தனது தன்னாட்சி நிறுவனங்களான தேசிய தொழில் முனைவோர் மற்றும் சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனம், இந்திய தொழில்முனைவோர் நிறுவனம் மூலம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தேசிய தொழில்முனைவோர் மற்றும் சிறு வணிக மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம், இந்திய தொழில்முனைவோர் சுற்றுச்சூழல் அமைப்பை ஆதரிப்பதற்காக 2023, செப்டம்பர் 4 அன்று மெட்டா உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆர்வமுள்ள மற்றும் தற்போதைய சிறு வணிக உரிமையாளர்களுக்கு, இன்றைய மாறும் சந்தை சூழலில், செழித்து வளர தேவையான கருவிகள், அறிவு மற்றும் வளங்களை வழங்குவதும், வளர்ந்து வரும் மற்றும் தற்போதுள்ள தொழில்முனைவோருக்கு டிஜிட்டல் சந்தைப்படுத்துதல் திறன்களில் முகநுால், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற மெட்டா தளங்களால் ஏழு பிராந்திய மொழிகளில் பயிற்சி அளிப்பதும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள, ஒரு தன்னாட்சி நிறுவனமான குவஹாத்தியில் உள்ள, இந்திய தொழில்முனைவோர் நிறுவனம், சிறு அல்லது உள்ளூர் தொழில்முனைவோர் தங்கள் வணிகங்களுக்கு இணையத்தை திறம்பட பயன்படுத்த உதவும் வகையில் பல்வேறு திறன் மேம்பாட்டு திட்டங்களை நடத்தியுள்ளது.
உத்தரபிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களின் பல்வேறு மாவட்டங்களில் இதுவரை 800 பேருக்கு டிஜிட்டல் சந்தைப்படுத்துதல் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
திறன் வளர்ப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு அறிவு விழிப்புணர்வு திட்டத்தின் கீழ் 2021-24 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 516 பயிற்சியாளர்கள் பயிற்சி பெற்றனர்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சகத்தின் இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. ஜெயந்த் சவுத்ரி இந்தத் தகவலைத் தெரிவித்தார்
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2042548
***
(Release ID: 2042548)
IR/KV/KR
(Release ID: 2042586)
Visitor Counter : 63