உள்துறை அமைச்சகம்
புதிய குற்றவியல் சட்டங்களில் காவல்துறையின் பொறுப்புடைமைகள்
Posted On:
06 AUG 2024 4:30PM by PIB Chennai
காவல்துறையினரின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்தியுள்ள இந்தியக் குடிமைப் பாதுகாப்பு சட்டம் - (பிஎன்எஸ்எஸ்) 2023-ன் விதிகள் பின்வருமாறு: -
- பிஎன்எஸ்எஸ் பிரிவு 37 (பி)–ன் படி ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி இருக்க வேண்டும். கைது செய்யப்பட்ட நபர்களின் விவரங்கள் குறித்த தகவல்களைப் பராமரிப்பதற்கும், பொதுமக்களுக்கு காண்பிப்பதற்கும் பொறுப்பான உதவி சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு குறையாத ஒரு காவல்துறை அதிகாரி இருக்க வேண்டும்.
(2) பிஎன்எஸ்எஸ் பிரிவு 82 (2) மாவட்டத்திற்கு வெளியே பிறப்பிக்கப்பட்ட வாரண்டின் கீழ் கைது செய்யப்பட்டால், கைது செய்யும் காவல்துறை அதிகாரி அத்தகைய கைது பற்றிய கைது செய்யப்பட்ட நபர் வைக்கப்பட்டுள்ள இடம் பற்றிய தகவலை காவல்துறை அதிகாரிக்கும், கைது செய்யப்பட்ட நபர் வசிக்கும் மாவட்டத்தின் அத்தகைய காவல்துறை அதிகாரிக்கும் வழங்க வேண்டும்.
(3) பி.என்.எஸ்.எஸ் பிரிவு 105-ன்படி தேடுதல் பறிமுதல் பற்றிய ஆடியோ-வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும். காவல்துறை அதிகாரி அத்தகைய ஆடியோ வீடியோ பதிவை மாவட்ட மாஜிஸ்திரேட், உட்கோட்ட மாஜிஸ்திரேட் அல்லது முதல் வகுப்பு நீதித்துறை நடுவருக்கு தாமதமின்றி அனுப்ப வேண்டும் என்றும் அது கூறுகிறது. பி.என்.எஸ்.எஸ் பிரிவு 185 ஆடியோ-வீடியோ மின்னணு முறைகள் மூலம் தேடல் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், அத்தகைய எந்தவொரு பதிவின் நகல்களும் 48 மணி நேரத்திற்குள் குற்றத்தை அறிந்துகொள்ள அதிகாரம் பெற்ற மாஜிஸ்திரேட்டுக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் கூறுகிறது.
(4) பி.என்.எஸ்.எஸ் பிரிவு 176 (2) காவல்துறை அதிகாரி தினசரி நாட்குறிப்பு அறிக்கையை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மாஜிஸ்திரேட்டுக்கு அனுப்ப வேண்டும்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார் இதனைத் தெரிவித்தார்.
*****
(Release ID: 2042126)
SMB/RS/KR
(Release ID: 2042567)
Visitor Counter : 86