உள்துறை அமைச்சகம்
ஆட்கடத்தல் குற்றங்களைத் தடுக்க அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது
Posted On:
06 AUG 2024 4:35PM by PIB Chennai
ஆட்கடத்தல், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் குற்றங்களைத் தடுப்பதிலும், எதிர்கொள்வதிலும் மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்திய நியாயச் சட்டம் 2023-ன் பிரிவு 143, மனிதக் கடத்தல் தொடர்பான எந்தவொரு குற்றத்திற்கும் கடுமையான தண்டனை விதிகளை வகுத்துள்ளது. பிரிவு 144 (1) கடத்தப்பட்ட குழந்தைகளின் பாலியல் சுரண்டல் குற்றத்திற்கு கடுமையான தண்டனையை வழங்குகிறது. இதுபோன்ற குற்றங்களுக்கு ஐந்து ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும்.
பிரிவுகள் 95 முதல் 99 வரை குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கையாள்கின்றன, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை வழங்குகின்றன. குழந்தையை வேலைக்கு அமர்த்துதல், வேலையில் ஈடுபடுத்துதல் போன்ற குற்றங்களைக் கையாள்வதற்கான ஏற்பாடுகள் இந்தப் பிரிவுகளில் உள்ளன; பாலியல் தொழில் போன்ற நோக்கங்களுக்காக குழந்தையை விற்பது / வாங்குவது என்ற குற்றத்திற்கான தண்டனை மூன்று ஆண்டுகள் முதல் பதினான்கு ஆண்டுகள் வரை இருக்கும்.
பிச்சை எடுக்கும் நோக்கத்திற்காக குழந்தையைக் கடத்துவது அல்லது முடமாக்குவதற்கு எதிராக இந்திய நீதிச்சட்டத்தின் பிரிவு 139 தண்டனை விதிக்கிறது. பிரிவு 141 சட்டவிரோத பாலியல் சுரண்டலுக்காக பெண் அல்லது பையனை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்கான தண்டனையை விதிக்கிறது. இந்தக் குற்றங்களுக்கான தண்டனை பத்து ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை இருக்கும்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இத்தகவலை மத்திய உள்துறை இணையமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார் தெரிவித்தார்.
*****
(Release ID: 2042138)
SMB/RS/KR
(Release ID: 2042563)