பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறந்த நிர்வாகம் குறித்து 11 நாடுகளைச் சேர்ந்த 40 குடிமைப்பணி அதிகாரிகளுக்கு இரண்டு வார காலப் பயிற்சி

Posted On: 07 AUG 2024 12:32PM by PIB Chennai

இந்திய பசிபிக் ஒத்துழைப்புக் கூட்டமைப்பு மற்றும் இந்திய பெருங்கடல் பிராந்திய நாடுகளைச் சேர்ந்த குடிமைப்பணி ஊழியர்களுக்கான கொள்கை மற்றும்  ஆளுமைக் குறித்த முதலாவது மேம்பட்ட தலைமைத்துவ வளர்ச்சிப் பயிற்சித் திட்டம் முசோரியில் உள்ள சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய மையத்தில் இன்று தொடங்கியது.

 

சீஷெல்ஸ், சோமாலியா, தென்னாப்பிரிக்கா, இந்தோனேசியா, இலங்கை, தான்சானியா, மடகாஸ்கர், பிஜி, கென்யா, மாலத்தீவு மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 40 புகழ்பெற்ற பங்கேற்பாளர்களுடன் 2024, ஆகஸ்ட் 5 முதல் 2024, ஆகஸ்ட் 16 வரை இந்த நிகழ்ச்சி நடைபெற செய்யப்பட்டுள்ளது. இந்த பங்கேற்பாளர்கள் தலைமை இயக்குநர், செயலாளர், மாவட்ட ஆட்சியர், பொது மேலாளர், மனிதவள உயரதிகாரி மற்றும் தொழில் துறை ஒருங்கிணைப்பாளர் போன்ற முக்கிய பதவிகளை வகிக்கின்றனர்.

 

மத்திய அரசின் பணியாளர், பொதுமக்கள் குறைகள் தீர்ப்பு, ஓய்வூதிய அமைச்சகத்தின் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் தீர்ப்பு துறையின் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனமான சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய மையம், தேசிய, சர்வதேச அளவில் செயல் ஆராய்ச்சி, ஆய்வுகள் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றிற்கு உறுதிபூண்டுள்ளது.

 

இந்நிகழ்ச்சியில் பேசிய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் செயலாளர் திரு. வி. ஸ்ரீனிவாஸ், பிராந்தியத்தின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களை வரவேற்றார். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்தும் அதே வேளையில், குடிமக்கள் அரசை எளிதில் அணுகுவதற்கு தொழில்நுட்பத்தின் பங்கை அவர் எடுத்துரைத்தார். "குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுமை" என்ற இந்தியாவின் கொள்கை கோட்பாடு குறித்தும், செயலக சீர்திருத்தங்கள், நிர்வாகத்தை தரப்படுத்துதல், -சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் காலக்கெடுவுக்குள் வெளிப்படையான முறையில் குறைகளை சிறப்பாக நிவர்த்தி செய்வதை உறுதி செய்தல் ஆகியவற்றின் மூலம் குடிமக்களுக்கு டிஜிட்டல் அதிகாரமளித்தலை அடைய நாடு எவ்வாறு பாடுபடுகிறது என்பது குறித்தும் அவர் விவாதித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2042475

***

(Release ID: 2042475)

IR/KV/KR




(Release ID: 2042529) Visitor Counter : 42