உள்துறை அமைச்சகம்
வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தால் வன்முறை சம்பவங்கள் குறைந்துள்ளது
Posted On:
06 AUG 2024 4:29PM by PIB Chennai
ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958-ன் கீழ் 'பதற்றமான பகுதிகள்' கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன. 2014-ம் ஆண்டு முதல் வடகிழக்கு மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில் இந்த சட்டத்தின் பயன்பாடு நீக்கப்பட்டுள்ளது.
திரிபுராவில் 27.05.2015 முதலும், மேகாலயாவில் 1.4.2018 முதலும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமல்படுத்துவது திரும்ப பெறப்பட்டது. அசாமில் 4 மாவட்டங்களைத் தவிர அனைத்து மாவட்டங்களிலிருந்தும் முழுமையாக திரும்பப் பெறப்பட்டது
அருணாச்சல பிரதேசம்: படிப்படியாக திரும்பப் பெறப்பட்டது, தற்போது நம்சாய் மாவட்டத்தில் 3 காவல் நிலைய பகுதிகள் மற்றும் 3 பிற பகுதிகள் மாவட்டங்களில் மட்டுமே பொருந்தும்.
மணிப்பூரில் 7 மாவட்டங்களில் 19 காவல் நிலைய பகுதிகளில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது.
வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்பு நிலைமை 2014-ம் ஆண்டிலிருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. 2014-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023-ம் ஆண்டில் கிளர்ச்சி சம்பவங்கள் 71% குறைவாகும். பாதுகாப்புப் படை வீரர்களின் இறப்புகளின் எண்ணிக்கையில் 60 சதவீதமும், பொதுமக்கள் இறப்புகளில் 82 சதவீதமும் குறைவாகும்.
இத்தகவலை மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2042124
*****
IR/RS/DL
(Release ID: 2042346)
Visitor Counter : 35