உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இணையவழி குற்றங்களை தடுக்க விரிவான நடவடிக்கை

Posted On: 06 AUG 2024 4:34PM by PIB Chennai

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் குற்றங்கள் குறித்த புள்ளிவிவர தரவுகளைத் தொகுத்து "இந்தியாவில் குற்றம்" என்ற தனது வெளியீட்டில் வெளியிடுகிறது.

 

சமீபத்திய வெளியிடப்பட்ட அறிக்கை 2022-ம் ஆண்டுக்கானது. அந்த தரவுகளின்படி, 2020 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையின் படி,

2020-ம் ஆண்டு 50,035 வழக்குகளும், 2021-ம் ஆண்டு 52,974 வழக்குகளும், 2022-ம் ஆண்டு 65,893 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின்படி 'காவல்துறை','பொது ஒழுங்கு' ஆகியவை மாநில பட்டியலில் உள்ளன.

இணையதள பரிவர்த்தனை மோசடிகள் மற்றும் சைபர் குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களைத் தடுப்பது, கண்டுபிடிப்பது, புலனாய்வு செய்வது மற்றும் வழக்குத் தொடர்வது ஆகியவை மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் முதன்மையான பொறுப்பாகும்.

மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் முன்முயற்சிகளுக்கு மத்திய அரசு ஆலோசனைகள் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி உதவி அளிக்கிறது.

 

இத்தகவலை  மத்திய உள்துறை இணையமைச்சர்  திரு பந்தி சஞ்சய் குமார் மக்களவையில்  இன்று கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2042137

---------------

IR/RS/DL


(Release ID: 2042344) Visitor Counter : 63