புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் - விவசாயிகளுக்கான சூரியசக்தி மின்திட்டம்

Posted On: 06 AUG 2024 2:56PM by PIB Chennai

பிரதமரின்- விவசாயிகளுக்கான சூரியசக்தி மின்திட்டம் (பிரதமரின் குசும்) மார்ச், 2019-ல் அறிமுகப்படுத்தியது, இது விவசாயிகளுக்கு எரிசக்தி மற்றும் தண்ணீர் பாதுகாப்பை வழங்குவதுடன், அவர்களின் வருமானத்தை அதிகரித்தல், பண்ணைத் துறையில் டீசல் பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு ஜனவரி 2024 இல் மதிப்பிடப்பட்டது.

பிரதமரின்-குசும் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயனளிக்கும் மூன்று கூறுகள் பின்வருமாறு:-

தொகுப்பு-: விவசாயிகள் தங்கள் நிலங்களில் 2 மெகாவாட் திறன் வரை பரவலாக்கப்பட்ட தரை / ஸ்டில்ட் மவுண்டட் கிரிட் இணைக்கப்பட்ட சூரிய சக்தி அல்லது பிற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சார்ந்த மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கலாம்.புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் நிலையத்தை விவசாயிகள் தங்கள் சொந்த நிலத்தில் நேரடியாகவோ அல்லது விவசாயி குழுக்கள் / கூட்டுறவு சங்கங்கள் / ஊராட்சிகள் / உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் / தண்ணீர் பயன்படுத்துவோர் சங்கங்கள் (WUA) ஆகியவற்றுடன் கூட்டாகவோ அல்லது மேம்பாட்டாளர் மூலமாகவோ நிறுவலாம்.இந்த மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை மின்சார விநியோக நிறுவனங்கள் முன்பே நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் வாங்குகின்றன. விவசாயிகள் தங்கள் நிலத்தை டெவலப்பருக்கு குத்தகைக்கு விட்டால், அவர்களும் குத்தகை வாடகைக்கு தகுதியுடையவர்கள்.

மின்சார பகிர்மான நிறுவனங்கள், செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை (பிபிஐ), கொள்முதல் செய்த யூனிட் ஒன்றுக்கு ரூ.0.40 அல்லது நிறுவப்பட்ட திறனில் ஒரு மெகாவாட்டிற்கு ரூ.6.6 லட்சம், இதில் எது குறைவோ அந்த தொகை, வணிக ரீதியிலான செயல்பாட்டுத் தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும். மின்சார பகிர்மான நிறுவனங்கள் விரும்பினால், மத்திய அரசால் அவர்களுக்கு வழங்கப்பட்ட PBI-யை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலை (REPP) உரிமையாளருக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் அதிக போட்டி கட்டணத்தைப் பெறலாம்.

தொகுப்பு ஆ: இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் தனித்தியங்கும் சூரிய ஒளி விவசாய பம்புசெட்டுகளை பாசனத்திற்காக நிறுவலாம்.தனித்து நிற்கும் சூரிய சக்தி விவசாய பம்ப்பிற்கு 30% (அல்லது வடகிழக்கு பிராந்தியம் / மலைப்பாங்கான பகுதி / தீவுகளுக்கு 50%) மத்திய நிதி உதவியை (CFA) அரசாங்கம் வழங்குகிறது.

தொகுப்பு இ: இந்த கூறு அதன் தனிநபர் பம்ப் சூரியசக்தி மயமாக்கல் (IPS) முறையின் கீழ் தொகுப்புடன் -இணைக்கப்பட்ட விவசாய பம்புகளின் சூரிய ஒளிமயமாக்கலை செயல்படுத்துகிறது. விவசாய சுமைகளின் ஃபீடர் அளவிலான சூரியசக்தி மயமாக்கல் (FLS) செயல்படுத்துகிறது. ஐபிஎஸ் & எஃப்எல்எஸ் ஆகிய இரண்டிற்கும் தொகுப்பு-இ-ன் கீழ் 30% (அல்லது வடகிழக்கு பிராந்தியம் / மலைப்பாங்கான பகுதி / தீவுகளுக்கு 50%) மத்திய நிதி உதவியை (CFA) அரசு வழங்குகிறது.இதன் மூலம் விவசாயிகளுக்கு பகல் நேர சூரிய ஒளி மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

30.06.2024  அன்று நிலவரப்படி, பிரதமரின் குசும் திட்டத்தின் மூலம், நாட்டில் பயனடைந்த மொத்த விவசாயிகளின் எண்ணிக்கை 4,11,222 ஆகும்.

பிரதமரின் குசும் திட்டத்தின் தொகுப்பு ஆ மற்றும் தொகுப்பு-இ-ன் கீழ், இந்திய அரசு 30% மத்திய நிதி உதவியை (CFA) (அல்லது வடகிழக்கு பிராந்தியம்/மலைப்பாங்கான பகுதி/தீவுகளுக்கு 50%) தனித்த விவசாய பம்புகளை நிறுவுவதற்கும் தொகுப்புடன் இணைக்கப்பட்ட விவசாய பம்புகளின் சூரிய ஒளிமயமாக்கலுக்கும் வழங்குகிறது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

***

MM/AG/DL


(Release ID: 2042293) Visitor Counter : 71