கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
நீர்வழிப் பாதை மேம்பாட்டுக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகள்
Posted On:
06 AUG 2024 1:42PM by PIB Chennai
நாட்டில் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்த, 24 மாநிலங்களில் உள்ள 111 நீர்வழிப் பாதைகள் (5 தற்போதுள்ள மற்றும் 106 புதிய நீர்வழிகள் உட்பட) தேசிய நீர்வழிகள் சட்டம் 2016ன் கீழ் தேசிய நீர்வழிப் பாதைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 111 தேசிய நீர்வழிப் பாதைகளில், 25 தேசிய நீர்வழிப் பாதைகள் மாநிலங்களுக்கிடையேயான தேசிய நீர்வழிப் பாதைகளாகும்.
ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, சத்தீஷ்கர், கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, மஹாராஷ்டிரா மாநிலங்களில் காக்கிநாடா கால்வாய் பாய்கிறது. தமிழ்நாடு, கேரளாவில் ஏவிஎம் கால்வாய் பாய்கிறது.
இத்தகவலை மத்திய கப்பல் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2042030
***
IR/RS/KV
(Release ID: 2042088)
Visitor Counter : 47