கலாசாரத்துறை அமைச்சகம்
உள்நாட்டு கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றை பாதுகாக்க நடவடிக்கை
Posted On:
05 AUG 2024 2:00PM by PIB Chennai
உள்நாட்டு கலாச்சாரம் உட்பட நாடு முழுவதும் நாட்டுப்புற கலை மற்றும் கலாச்சாரத்தின் பல்வேறு வடிவங்களை பாதுகாக்கவும், மேம்படுத்தவும், பாதுகாக்கவும், மத்திய அரசு 1985-86 -ம் ஆண்டில் நாட்டில் ஏழு பிராந்திய கலாச்சார மையங்களை (ZCCs) அமைத்தது, இதன் தலைமையகம் நாக்பூர், பாட்டியாலா, உதய்பூர், பிரயாக்ராஜ், கொல்கத்தா, திமாபூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. நாட்டில் பல்வேறு கலாச்சார நடவடிக்கைகள் மற்றும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஏற்பாடு செய்கின்றன. இதற்காக அவர்களுக்கு ஆண்டு மானிய உதவி வழங்கப்படுகிறது.
மேலும், பாரம்பரிய அறிவைப் பாதுகாப்பதற்காக, கலாச்சார அமைச்சகம் அதன் பல்வேறு தன்னாட்சி அமைப்புகளின் கீழ், பிராந்திய மையங்கள் மற்றும் திட்ட அலுவலகங்களை அமைத்துள்ளது. அவை மற்றவற்றுடன் உள்நாட்டு கலாச்சாரம் உள்ளிட்ட கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றின் மேம்பாடு மற்றும் பாதுகாப்பிற்காக செயல்படுகின்றன.
இந்தத் தகவலை மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் மக்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
***
IR/KV/KR/DL
(Release ID: 2041876)
Visitor Counter : 35