கலாசாரத்துறை அமைச்சகம்
கடந்த பத்து ஆண்டுகளில் 345 தொல்பொருட்கள் மீட்கப்பட்டு தாயகம் கொண்டுவரப்பட்டுள்ளன
Posted On:
05 AUG 2024 2:01PM by PIB Chennai
2014 -ம் ஆண்டு முதல் மொத்தம் 345 தொல்பொருட்கள் பல்வேறு நாடுகளில் இருந்து மீட்கப்பட்டு திருப்பி கொண்டு வரப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட தொல்பொருட்களை நாட்டிற்கு கொண்டு வருவதற்காக பட்ஜெட்டில் சிறப்பு ஒதுக்கீடு குறித்து குறிப்பிடப்படவில்லை. இந்திய தொல்லியல் ஆய்வகம் தனக்குக் கிடைக்கும் பட்ஜெட்டில் இருந்து தேவைக்கேற்ப செலவினங்களை மேற்கொள்கிறது.
கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதில் பொது மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.பொதுமக்கள் விழிப்புணர்வுக்காக இந்தியத் தொல்லியல் துறையால் பல்வேறு கண்காட்சிகள் மற்றும் பயிலரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உதாரணமாக, கஜுராஹோவில் நடைபெற்ற ஜி-20 கூட்டம் மற்றும் புதுதில்லியில் நடைபெற்ற உலக பாரம்பரியச் சின்னங்கள் குழுக் கூட்டம் ஆகியவற்றின் போது காட்சிப்படுத்தப்பட்டிருந்த மீட்கப்பட்ட கலைப்பொருட்களின் கண்காட்சிகள், பிரதிநிதிகள் மற்றும் பார்வையாளர்களால் பாராட்டப்பட்டன. தாயகம் கொண்டு வரப்பட்ட குறிப்பிட்ட தொல்பொருட்கள், புறணா குயிலாவில் உள்ள காட்சிக்கூடத்தில் பொதுமக்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்திய தொல்பொருள் ஆய்வகம் கலைப்பொருட்களின் கடத்தலைத் தடுக்க பல்வேறு சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.
கடந்த 2014 -ம் ஆண்டு முதல் 2024 -ம் ஆண்டு தற்போது வரை பல்வேறு நாடுகளிலிருநது 345 தொல்பொருட்கள் மீட்கப்பட்டு தாயகம் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்தத் தகவலை மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் மக்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
***
IR/KV/KR/DL
(Release ID: 2041864)