திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 71,000 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்

Posted On: 05 AUG 2024 1:03PM by PIB Chennai

பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 71,000 பேர் பயிற்சி பெற்றுள்ளனர் என்று மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) கூறியுள்ளார்.

மக்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பாக அவர் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:

திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் (MSDE) தனது முதன்மைத் திட்டமான பிரதமரின்  திறன் மேம்பாட்டுத் திட்டத்தை 2015 முதல் செயல்படுத்தி வருகிறது. இளைஞர்கள் சுய வேலைவாய்ப்பு மற்றும் ஊதிய வேலைவாய்ப்பு மூலம் சிறந்த வாழ்வாதாரத்திற்காக தொழிற்சாலைக்கு ஏற்ற திறன் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இத்திட்டத்தின் கீழ், குறுகிய கால பயிற்சி மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சியும், முந்தையக் கற்றலை அங்கீகரித்தல் மூலம் திறனை மேம்படுத்துதல் மற்றும் மறுதிறன் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

வேலைவாய்ப்புகள் குறுகிய கால பயிற்சி  கூறுகளில் இத்திட்டத்தின் முதல் மூன்று பதிப்புகளில் கண்காணிக்கப்பட்டன.

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் (2021-22 முதல் 2023-24 வரை) பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் மாவட்ட வாரியான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், அவர்களால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களின் விவரங்கள் இந்த அமைச்சகத்திடம் இல்லை.

 

வ.

எண்

மாவட்டம்

2021-22

2022-23

2023-24

பயிற்சி பெற்றவர்கள்  எண்ணிக்கை

பயிற்சி பெற்றவர்கள்  எண்ணிக்கை

பயிற்சி பெற்றவர்கள்  எண்ணிக்கை

1

அரியலூர்

805

0

480

2

செங்கல்பட்டு

1

0

140

3

சென்னை

3591

1427

3680

4

கோவை

1628

574

2922

5

கடலூர்

1141

288

937

6

தர்மபுரி

271

240

502

7

திண்டுக்கல்

1451

285

625

8

ஈரோடு

1065

260

1215

9

கள்ளக்குறிச்சி

0

20

0

10

காஞ்சிபுரம்

2634

35

1204

11

கன்னியாகுமரி

21

40

727

12

கரூர்

670

210

456

13

கிருஷ்ணகிரி

270

270

1131

14

மதுரை

524

560

840

15

நாகப்பட்டினம்

297

467

880

16

நாமக்கல்

674

261

1800

17

பெரம்பலூர்

376

0

748

18

புதுக்கோட்டை

100

0

341

19

ராமநாதபுரம்

1015

351

0

20

ராணிப்பேட்டை

59

0

517

21

சேலம்

490

0

613

22

சிவகங்கை

941

200

397

23

தென்காசி

0

0

25

24

தஞ்சாவூர்

714

0

779

25

நீலகிரி

543

240

1220

26

தேனி

73

0

236

27

திருவள்ளூர்

3013

396

2648

28

திருவாரூர்

881

245

693

29

திருச்சி

675

172

1552

30

திருநெல்வேலி

326

0

812

31

திருப்பத்தூர்

270

70

443

32

திருப்பூர்

393

270

50

33

திருவண்ணாமலை

948

132

2936

34

தூத்துக்குடி

214

0

386

35

வேலூர்

1745

615

1422

36

விழுப்புரம்

856

249

566

37

விருதுநகர்

382

152

598

 

மொத்தம்

29057

8029

34521

இந்த தகவலை மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ஜெயந்த் சவுத்ரி மக்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

*****

PKV/KPG/DL


(Release ID: 2041859) Visitor Counter : 85