திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
திறன் இந்தியா இயக்கத்தின் கீழ் பயனடையும் இளைஞர்கள்
Posted On:
05 AUG 2024 1:05PM by PIB Chennai
மத்திய அரசின் திறன் இந்தியா இயக்கத்தின் கீழ், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், திறன் மேம்பாட்டு மையங்கள் / நிறுவனங்கள் போன்றவற்றின் விரிவான கட்டமைப்பு மூலம் திறன், மறு-திறன் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குகிறது. பல்வேறு திட்டங்களின் கீழ், பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம், தேசிய தொழிற்பழகுநர் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் கைவினைஞர் பயிற்சித் திட்டம் ஆகியவை தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் (ITI) மூலம் நாடு முழுவதும் உள்ள சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பயனளிக்கிறது. இந்திய இளைஞர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்துவதையும், தொழில்துறைக்கு ஏற்ற திறன்களை வளர்த்துக் கொள்வதையும் இந்த திறன் இந்தியா இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
தேசிய தொழிற்பழகுநர் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம், 2018-19-ஆம் ஆண்டு முதல் 2024 ஜூன் மாதம் வரை 29,91,072 பேரும், கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ், 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை 79,51,834 பேரும் பயடைந்தனர்.
இந்தத் தகவலை மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. ஜெயந்த் சவுத்ரி மக்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
***
IR/KV/KR/DL
(Release ID: 2041748)
Visitor Counter : 56