திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழில்துறை மேம்பாட்டு திட்டத்திற்கு தமிழ்நாட்டின் 32 ஐடிஐ-கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன

Posted On: 05 AUG 2024 1:06PM by PIB Chennai

திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் கீழ் உள்ள பயிற்சி தலைமை இயக்குநரகம், உலக வங்கி உதவியுடன் மத்திய அரசின் திட்டமாக இருந்த தொழில்துறை மதிப்பு மேம்பாட்டிற்கான திறன்களை வலுப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தியது. தொழிற்பயிற்சி நிலையங்கள், தொழிற்பழகுநர் பயிற்சிகள் மூலம் வழங்கப்படும் திறன் பயிற்சிகளின் பொருத்தம் மற்றும் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் இத்தொழிற்பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் காலம் 2017-2024 (மே வரை) ஆகும்.

இத்திட்டத்தின் கீழ் 500 ஐடிஐ-கள் (இதில் 467 அரசு மற்றும் 33 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் அடங்கும்) ஆய்வகம், உபகரணங்கள் மற்றும் கருவிகளை மேம்படுத்துவதன் மூலம் பயிற்சியின் தொழில்துறை பொருத்தத்தை மேலும் மேம்படுத்த  தேர்ந்தெடுக்கப்பட்டன.  

இவற்றில் தமிழ்நாட்டில் இருந்து 29 அரசு ஐடிஐகளும், 3 தனியார் ஐடிஐகளும், புதுச்சேரியில் இருந்து 2 அரசு ஐடிஐகளும் தேர்ந்தெடுக்கப்பட்டன.

மொத்தம் 90 தொழில் தொகுப்புகள் தொழில்துறை மதிப்பு மேம்பாட்டிற்கான திறன்களை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ் தொழில் பயிற்சி முன்முயற்சி  மானிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இவற்றில் தமிழ்நாட்டின் தொழில் தொகுப்புகளின் எண்ணிக்கை 15 ஆகும்.

இந்தத் தகவலை மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்தின் இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ஜெயந்த் சவுத்ரி மக்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2041505

***

SMB/AG/KR/DL

 


(Release ID: 2041704) Visitor Counter : 71