திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3.55 கோடி பேருக்குப் பயிற்சி
Posted On:
05 AUG 2024 1:08PM by PIB Chennai
தேசிய திறன் வளர்ச்சி ஆணையத்தின் மூலம் 30.06.2024 வரை மொத்தம் 3 கோடியே 55 லட்சத்து 20 ஆயிரத்து 745 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மத்திய திறன் மேம்பாடு, தொழில் முனைவு அமைச்சகம் மற்றும் இதர அமைச்சகங்கள் / துறைகள் மூலம் பல்வேறு திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம் (2015 முதல்), தேசிய தொழில் பழகுநர் ஊக்குவிப்புத் திட்டம் (2018 முதல்), பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் (2023 முதல்), தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சந்தை சார்ந்த கட்டண அடிப்படையிலான திட்டங்கள் (2010 முதல்), செயல்படுத்தப்பட்டு பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கை விவரம் இன்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவு அமைச்சகத்தின் இணையமைச்சர் (தனி பொறுப்பு) திரு ஜெயந்த் சௌத்ரி மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளிக்கையில் பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மொத்தம் 1 கோடியே 48 லட்சத்து 11 ஆயிரத்து 506 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதாகவும், இவர்களில் தமிழ்நாட்டில் 8 லட்சத்து 24 ஆயிரத்து 589 பேரும், புதுச்சேரியில் 32 ஆயிரத்து 735 பேரும், பயிற்சி பெற்றுள்ளதாகவும் கூறினார்.
தேசிய தொழில் பழகுநர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் மொத்தம் 29 லட்சத்து 91 ஆயிரத்து 72 பேர் பயிற்சிப் பெற்றிருப்பதாகவும், இவர்களில் 2 லட்சத்து 81 ஆயிரத்து 271 பேர் தமிழ்நாட்டையும், 6 ஆயிரத்து 369 பேர் புதுச்சேரியையும் சேர்ந்தவர்கள் என்று அவர் தெரிவித்தார்.
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் மொத்தம் 5 லட்சத்து 18 ஆயிரத்து 463 பேர் திறன் பயிற்சி பெற்றிருப்பதாக கூறினார். மேலும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சந்தை சார்ந்த கட்டண அடிப்படையிலான திட்டங்களின் கீழ் நாடு முழுவதும் 1 கோடியே 71 லட்சத்து 99 ஆயிரத்து 704 பேர் பயிற்சி பெற்றிருப்பதாக அவர் தெரிவித்தார். இவர்களில் 12 லட்சத்து 37 ஆயிரத்து 160 பேர் தமிழ்நாட்டையும், 14 ஆயிரத்து 852 பேர் புதுச்சேரியையும் சேர்ந்தவர்கள் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2041511
***
SMB/AG/KR
(Release ID: 2041680)
Visitor Counter : 62