சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சமூக காடுகள் திட்டம்

Posted On: 05 AUG 2024 12:20PM by PIB Chennai

நகர்ப்புறங்களில் பசுமை மண்டலங்களை மேம்படுத்தும் மாநிலங்களின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க நகர்ப்புற வனத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதி வழங்குகிறது. மாநகராட்சி, நகராட்சி மன்றங்கள்,  நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள நகரங்களில் குடியிருப்பவர்களுக்கு முழுமையான ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழலை வழங்குவதற்காக 1000 நகர்ப்புற வன மண்டலங்களை உருவாக்கவும், அதன் மூலம் தூய்மையான, பசுமையான, ஆரோக்கியமான மற்றும் நிலையான நகரங்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கவும் நகர்ப்புற வனத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற வனம், வனப்பகுதி இழப்பீட்டு நிதி மேலாண்மை  மற்றும் திட்டமிடுதல் ஆணைய நிதியால் ஆதரிக்கப்படுகிறது. நகர்ப்புற வனத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

நகர்ப்புற அமைப்பில் பசுமையான இடம் மற்றும் அழகியல் சூழலை உருவாக்குதல்.

தாவரங்கள் மற்றும் பல்லுயிர் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குதல் மற்றும் சுற்றுச்சூழல் மேற்பார்வையை வளர்த்தல்.

பிராந்தியத்தின் முக்கியமான தாவரங்களின் இருப்பிட பாதுகாப்பை எளிதாக்குதல்.

மாசு தணிப்பு, தூய்மையான காற்று, இரைச்சல் குறைப்பு, நீர் அறுவடை மற்றும் வெப்ப தீவுகள் விளைவு மூலம் நகரங்களின் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு பங்களிப்பு.

நகரத்தில் வசிப்பவர்களுக்கு சுகாதார நன்மைகளை நீட்டித்தல் மற்றும்

நகரங்களுக்கு காலநிலை நெகிழ்ச்சியாக உதவுதல்.

வனம் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்காக, 1980, இந்திய வனச் சட்டம், 1927, வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம் 1972 மற்றும் பிற மத்திய, மாநில சட்டங்கள் உட்பட பல்வேறு சட்டங்கள் அந்தந்த மாநில அரசு, யூனியன் பிரதேச நிர்வாகத்தால் செயல்படுத்தப்படுகின்றன.

இந்தத் தகவலை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

------

(Release ID 2041467)

PKV/KPG/KR


(Release ID: 2041601) Visitor Counter : 90


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP