மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 இன் கீழ் 1,065 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, 937 புகார்கள் மேல்முறையீட்டுக் குழுக்களால் தீர்க்கப்பட்டன.

Posted On: 02 AUG 2024 7:08PM by PIB Chennai

சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் விரிவான பொது ஆலோசனைகளுக்குப் பிறகு,அரசு, தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைக் குறியீடு) விதிகள், 2021-ஐ ("தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021") 25.02.2021 அன்று அறிவிக்கை செய்தது, அவை பின்னர் 28.10.2022 மற்றும் 6.4.2023 அன்று திருத்தப்பட்டன.

தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021, பாதுகாப்பான மற்றும் நம்பகமான இணையத்திற்கான பொறுப்புணர்வை உறுதி செய்வதற்காக குறிப்பிடத்தக்க சமூக ஊடக இடைத்தரகர்கள் உள்ளிட்டோர்  மீது குறிப்பிட்ட சட்டக் கடமைகளை விதித்தது.

குறைதீர்ப்பு மேல்முறையீட்டுக் குழுக்கள் தொடங்கப்பட்ட மார்ச் 1, 2023 முதல் ஜூன் 30, 2024 வரை தாக்கல் செய்யப்பட்ட மற்றும் தீர்க்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை பின்வருமாறு:
* தாக்கல் செய்யப்பட்ட மொத்த வழக்குகள்:1,065
* முடிக்கப்பட்ட வழக்குகள்: 937

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் திரு. ஜிதின் பிரசாதா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

******

RB/DL



(Release ID: 2041106) Visitor Counter : 31