சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கிராமப்புறங்களில் புற்றுநோய் பரிசோதனைக்கான செயல் திட்டத்தின் நிலை
Posted On:
02 AUG 2024 7:01PM by PIB Chennai
உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இருதய நோய், புற்றுநோய், பக்கவாதம், நாள்பட்ட சிறுநீரக நோய், ஆஸ்துமா, மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் போன்ற தொற்றா நோய்களைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் இந்திய அரசு 2010 முதல் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் தேசிய தொற்றா நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திட்டத்தை (என்.பி-என்.சி.டி) செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டம் உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், மனிதவள மேம்பாடு, சுகாதார மேம்பாடு, ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், மேலாண்மை மற்றும் பரிந்துரைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், மாவட்ட அளவில் 753 என்.சி.டி கிளினிக்குகள், மாவட்ட அளவில் 356 பகல்நேர பராமரிப்பு மையங்கள் மற்றும் சமூக சுகாதார மையங்கள் அளவில் 6238 என்.சி.டி கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டங்கள் மற்றும் சமுதாய சுகாதார நிலைய அளவில் தொற்றா நோய் சிகிச்சை மையங்கள் மூலம் அனைத்து நிலைகளிலும் தொற்றா நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது மற்றும் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது.
அதிகம் ஏற்படும் மூன்று புற்றுநோய்கள் உட்பட பொதுவான தொற்றா நோய்களைத் தடுப்பது, கட்டுப்படுத்துவது மற்றும் கண்காணிப்பதற்கான முன்முயற்சி, தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சியின் கீழ், 30 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு பொதுவான தொற்றா நோய்களான நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் வாய்வழி, மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்களுக்கான பரிசோதனை செய்யப்படுகிறது. ஆயுஷ்மான் பாரத் – ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் திட்டத்தின் கீழ் சேவை வழங்கலின் ஒருங்கிணைந்த பகுதியாக, இந்த பொதுவான தொற்றா நோய்கள் மற்றும் புற்றுநோய்களுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஜூலை 29, 2024 நிலவரப்படி, இந்தியா 173,827 ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்களை செயல்படுத்தியுள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு. பிரதாப்ராவ் ஜாதவ் இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2040933
*****
RB/DL
(Release ID: 2041105)
Visitor Counter : 60