தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எஃப்எம் ரேடியோ சேனல்களின் மூன்றாம் கட்ட கொள்கையின் கீழ் ஏல இருப்பு விலையை நிர்ணயிப்பதற்கான ஆலோசனை அறிக்கையை டிராய் வெளியிட்டது

Posted On: 01 AUG 2024 6:09PM by PIB Chennai

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) இன்று எஃப்எம் ரேடியோ சேனல்களை ஏலம் விடுவதற்கான இருப்பு விலைகள் குறித்த ஆலோசனை அறிக்கையை வெளியிட்டது.


தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் 2024,  மார்ச்  19 தேதியிட்ட குறிப்பின் மூலம் தனியார் பண்பலை வானொலியின் விரிவாக்கத்திற்காக இமாச்சல் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 18 நகரங்களில் எஃப்எம் ரேடியோ சேனல்களை ஏலம் விடுவதற்கான இருப்பு விலை குறித்த டிராய் பரிந்துரைகளை கோரியது. இந்த நகரங்களுக்கு 'இ' என்ற புதிய பிரிவை அறிமுகப்படுத்த அமைச்சகம் முடிவு செய்துள்ளது. பயனுள்ள கதிர்வீச்சு சக்தி (ஈஆர்பி) தவிர, பிரிவு 'டி' நகரங்களுக்கு பொருந்தக்கூடிய அனைத்து தொழில்நுட்ப அளவுருக்களும் 'இ' வகை நகரங்களுக்கு பொருந்தும் என்று அது முன்மொழிந்துள்ளது.


 'இ' வகைக்கான இஆர்பி-ஐ 750 வாட் முதல் 1 கிலோ வாட் வரை அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. பிலாஸ்பூர் (சத்தீஸ்கர்), ரூர்கேலா (ஒடிசா) மற்றும் ருத்ராபூர் (உத்தரகண்ட்) ஆகிய நகரங்களுக்கு ரிசர்வ் விலையை பரிந்துரைக்குமாறு அமைச்சகம் டிராய்க்கு கோரிக்கை விடுத்துள்ளது.


அதன்படி, பண்பலை வானொலி அலைவரிசைகளின் மூன்றாம் கட்டக் கொள்கையின் கீழ், ஏலத்திற்கான இருப்பு விலையை நிர்ணயிப்பது குறித்து பங்குதாரர்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக இந்த ஆலோசனை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆலோசனை அறிக்கை மீதான எழுத்துப்பூர்வ கருத்துகள் பங்குதாரர்களிடமிருந்து 2024 ஆகஸ்ட் 29-க்குள் வரவேற்கப்படுகின்றன. எதிர் கருத்துகள், ஏதேனும் இருந்தால், 2024 செப்டம்பர் 12-க்குள் சமர்ப்பிக்கப்படலாம். கருத்துகள் மற்றும் எதிர் கருத்துகளை மின்னணு வடிவில் மின்னஞ்சல் ஐடிadvbcs-2@trai.gov.inமற்றும்jtadvbcs-1@trai.gov.in அனுப்பலாம்.


ஏதேனும் விளக்கம்  தகவல்களுக்கு, திரு தீபக் சர்மா, ஆலோசகர் (பி&சிஎஸ்) தொலைபேசி எண். +91-11- 20907774. ஆலோசனை அறிக்கையின் முழு உரை டிராய் இணையதளத்தில் www.trai.gov.in கிடைக்கிறது.

---

PKV/KPG/KV/DL


(Release ID: 2041049) Visitor Counter : 31