விவசாயத்துறை அமைச்சகம்
விவசாயத்தில் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தைத் தணிப்பதற்கான கொள்கைகள் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள்
प्रविष्टि तिथि:
02 AUG 2024 5:33PM by PIB Chennai
நீர் மற்றும் உணவுப் பாதுகாப்பில் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தைத் தணிக்க நீடித்த நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தை என்எம்எஸ்ஏ அரசு செயல்படுத்தி வருகிறது. மாறிவரும் பருவநிலைக்கு ஏற்ப இந்திய வேளாண்மையை மேலும் நெகிழ்திறன் கொண்டதாக மாற்றுவதற்கான உத்திகளை உருவாக்கி செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பருவநிலை மாற்றத்திற்கான தேசிய செயல் திட்டத்தில் உள்ள இயக்கங்களில் NMSA ஒன்றாகும். ஒரு துளிநீரில் அதிக பயிர் என்ற திட்டம், பண்ணை நீர் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்துதல், துல்லிய நீர்ப்பாசனம் மற்றும் இதர நீர் சேமிப்பு தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காக நுண்ணீர் பாசனத்தின் பரப்பை அதிகரிக்க பயனாளிக்கு மானியம் வழங்கப்படுகிறது.
வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் ஊட்டச்சத்து தானியங்களுக்கான துணை இயக்கம் ஒன்றை 28 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தி வருகிறது.
மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.ஏ.ஆர்) பருவநிலை நெகிழ்திறன் வேளாண்மையில் தேசிய கண்டுபிடிப்புகள் (NICRA) என்ற முதன்மை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பயிர்கள், கால்நடைகள், தோட்டக்கலை மற்றும் மீன்வளம் உள்ளிட்டவற்றில் விவசாயத்தில் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை ஆய்வு செய்வதும், விவசாயத்தில் பருவநிலை நெகிழ்திறன் தொழில்நுட்பங்களை உருவாக்கி மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு ராம்நாத் தாக்கூர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2040847
***
PLM/RS/DL
(रिलीज़ आईडी: 2041032)
आगंतुक पटल : 101