சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் குறித்த தகவல்கள்

Posted On: 02 AUG 2024 5:39PM by PIB Chennai

30.06.2024 நிலவரப்படி, நாட்டில் ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் ஜன் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் 34.7 கோடிக்கும் அதிகமான ஆயுஷ்மான் அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் தில்லி, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா தவிர 33 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் 73.59 லட்சம் அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன. 1,03,71,732 பேர் அதிகாரப்பூர்வமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

30.06.2024 நிலவரப்படி 7.37 கோடி பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் கோடி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகள் எந்த நேரத்திலும் அதாவது ஆண்டு முழுவதும் தங்கள் ஆயுஷ்மான் அட்டையை உருவாக்கலாம். தகுதியான பயனாளிகள் ஆயுஷ்மான் பயன்பாட்டைப் பயன்படுத்தி அட்டையை தாங்களே உருவாக்கலாம் அல்லது அருகிலுள்ள சி.எஸ்.சி அல்லது அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைக்குச் சென்று தங்கள் ஆயுஷ்மான் அட்டையை உருவாக்கலாம்.

இந்தியாவின் மக்கள் தொகையில் அடிமட்டத்தில் உள்ள 12.34 கோடி குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 55 கோடி பயனாளிகளுக்கு இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனை சிகிச்சைக்காக ஆண்டுக்கு ரூ.5 லட்சம் சுகாதார காப்பீட்டை வழங்குவதை ஏபி-பிஎம்ஜேஏஒய் நோக்கமாகக் கொண்டுள்ளது. தகுதியான பயனாளிகள் நாட்டில் 29,000 க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் சேர்ப்பது தொடர்பான பணமில்லா மற்றும் காகிதமில்லா சுகாதார சேவைகளைப் பெறலாம். பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, இருதயவியல், புற்றுநோயியல் உள்ளிட்ட 27 மருத்துவ சிறப்புப் பிரிவுகளில் 1949 நடைமுறைகள் தொடர்பான பணமில்லா சுகாதார சேவைகளை இந்தத் திட்டம் வழங்குகிறது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் கண்பத்ராவ் ஜாதவ் இதனைத் தெரிவித்தார்.

****

PKV/KPG/DL


(Release ID: 2041023) Visitor Counter : 460