வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி கடந்த நான்கு ஆண்டுகளில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது

Posted On: 02 AUG 2024 5:45PM by PIB Chennai

அரசின் பல்வேறு முயற்சிகளின் விளைவாக, இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி 2019-20 ஆம் ஆண்டில் ரூ .46,662.85 கோடியிலிருந்து 2023-24 ஆம் ஆண்டில் ரூ .61043.68 கோடியாக 30.81% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கத்துடன், ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்புகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுடன் இணைந்து கடல்சார் பொருட்கள் உள்ளிட்ட ஏற்றுமதி செயல்திறனை அரசு தொடர்ந்து கண்காணித்து மதிப்பாய்வு செய்கிறது.

மத்திய வர்த்தகத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் மதிப்புக் கூட்டுதலுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், பரிசோதனைக் கூடங்களை நிறுவுதல், பன்னாட்டு வர்த்தகக் கண்காட்சிகளில் பங்கேற்றல், ஏற்றுமதிக்கான நீர்வாழ் உயிரின வளர்ப்பு உற்பத்திக்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல் போன்றவற்றிற்கு அரசு உதவி அளிக்கிறது.

2024-25 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இறால் மற்றும் இறால் தீவனம் / மீன் தீவனம் தயாரிப்பதற்கான பல்வேறு பொருட்கள் / உள்ளீடுகள் மீதான இறக்குமதி வரிகள் குறைக்கப்படுவது, இந்திய கடல் உணவு அடிப்படையிலான மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளை சர்வதேச சந்தைகளில் அதிக போட்டித்தன்மையுடன் ஏற்றுமதியை அதிகரிக்க உதவும்.

மத்திய அரசின் மீன்வளத்துறை, பிரதம மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) என்ற முன்னோடித் திட்டத்தை, 2020-21 நிதியாண்டு முதல் 2024-25 நிதியாண்டு வரை 5 ஆண்டு காலத்திற்கு, அதாவது செயல்படுத்தி வருகிறது. மீன் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன், மீன் பிடிப்பு / தரம், தொழில்நுட்பம் அறுவடைக்குப் பிந்தைய உள்கட்டமைப்பு, நவீனமயமாக்கல் மற்றும் மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்துதல், இழப்புகளைக் குறைத்தல், போன்றவற்றில் உள்ள முக்கியமான இடைவெளிகளை நிவர்த்தி செய்வதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2040868

***

PLM/RS/DL


(Release ID: 2040991) Visitor Counter : 55