கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
சாகர்மாலா திட்டங்களின் சுற்றுச்சூழல் மதிப்பீடு
Posted On:
02 AUG 2024 2:02PM by PIB Chennai
தேசிய நீர்வழிகள் மற்றும் இணைப்பு தொடர்பான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக தேசிய நீர்வழிகள் -2-ல் எட்டு சிறிய முனையங்கள் மற்றும் இரண்டு சாய்வு பாதைகளை மேம்படுத்துவதற்கான அசாம் அரசின் திட்டத்திற்கு துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ.645.56 கோடி மொத்த ஒதுக்கீட்டில் 100 சதவீத நிதியுதவிக்கு ஒப்புக் கொண்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கைகளில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அசாம் அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தேவையான அனுமதிகள் மற்றும் ஒப்பந்தபுள்ளி செயல்முறையைத் தொடங்கவும்.
பஹாரி, துப்ரி, திசாங்குக், காகோர், கோல்பாரா, குய்ஜான், குருவா, மாட்மோரா ஆகிய இடங்களில் முன்மொழியப்பட்ட பயணிகள் முனையங்களை முடிக்க எதிர்பார்க்கப்படும் காலக்கெடு 27 மாதங்கள் ஆகும். மஜூலி மற்றும் துப்ரியில் முன்மொழியபபட்ட சறுக்கல்களை முடிக்க எதிர்பார்க்கப்படும் காலக்கெடு 36 மாதங்கள் ஆகும்.
அசாமில் சாகர்மாலா திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) ஆய்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை என்று அசாம் அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், 2022 ஆம் ஆண்டில் பயணிகள் முனையங்களுக்கான முதன்மை சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆய்வு நடத்தப்பட்டது.
அசாமில், சாகர்மாலா திட்டத்தின் கீழ், நீர்வழிகள் மேம்பாடு மற்றும் இணைப்புக்காக ரூ .1185 கோடி மதிப்புள்ள 10 திட்டங்கள் உள்ளன, அவற்றில் ரூ.157.4 கோடி மதிப்புள்ள 4 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன மற்றும் ரூ .1028 கோடி மதிப்புள்ள 6 திட்டங்கள் பல்வேறு கட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
*****
PLM/RS/KV
(Release ID: 2040821)