குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்

Posted On: 01 AUG 2024 5:00PM by PIB Chennai

பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் பிரதமரால் 17.09.2023 அன்று தொடங்கப்பட்டது. தங்கள் கைகள் மற்றும் கருவிகளால் வேலை செய்யும் கைவினைஞர்கள் மற்றும் சிற்பிகளுக்கு இறுதி வரை ஆதரவு வழங்குவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. பிரதமரின் விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை மூலம் அங்கீகாரம், திறன் மேம்பாடு, கருவித்தொகுப்பு ஊக்கத்தொகை, கடன் ஆதரவு, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஊக்கத்தொகை மற்றும் சந்தைப்படுத்தல் ஆதரவு ஆகியவை திட்டத்தின் கூறுகளில் அடங்கும். கர்நாடக மாநிலம் உட்பட நாடு முழுவதும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ்  தமிழ்நாட்டில் இருந்து 8,39,680 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற தகுதியான சிக்கபல்லாபூர் மாவட்டத்திலிருந்து பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை மற்றும் வெற்றிகரமான பதிவுகளின் எண்ணிக்கை முறையே97,356 மற்றும் 17,696ஆகும்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், "பயிற்சி நிறுவனங்களுக்கு உதவி (ATI)" என்ற மத்திய அரசு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் (i) குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் பயிற்சி நிறுவனங்களின் ஒட்டுமொத்த திறனை வலுப்படுத்துதல் மற்றும் (ii) திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது. இத்திட்டம் தேவை சார்ந்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் மற்றும் நடப்பு ஆண்டில் (26.07.2024 நிலவரப்படி) நாடு முழுவதும் ATI திட்டத்தின் கீழ் 2021-22 முதல் 2024 ஜூலை 26-ம் தேதி வரை ரூ.88.96 கோடி வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் 2023-24 நிதியாண்டில் கதர்த் தொழிலின் மொத்த உற்பத்தி ரூ.49,943.44 லட்சமாகவும், 27,612 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கதர் திட்டம், பதிவு செய்யப்பட்ட கதர் நிறுவனங்கள், இலாப நோக்கமற்ற அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை இணையமைச்சர் செல்வி. ஷோபா கரந்தலஜே இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

****************** 

MM/AG/KV


(Release ID: 2040670) Visitor Counter : 53