தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
பொருளாதாரத் துறைகளில் பெண்களுக்கு ஆதரவளித்தல்
Posted On:
01 AUG 2024 5:27PM by PIB Chennai
சம ஊதியச் சட்டம், 1976-ஐ அரசு இயற்றியுள்ளது. இச்சட்டம், ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு, ஒரே வேலை அல்லது ஒரே இயல்புடைய பணிக்கு எவ்வித பாகுபாடும் இன்றி சம ஊதியம் வழங்கவும், ஒரே வேலை அல்லது ஒரே மாதிரியான பணிக்கு நியமனம் செய்யும் போது, அல்லது பதவி உயர்வு பயிற்சி அல்லது இடமாற்றம் போன்ற பணி நிலைமைகளில் பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதைத் தடுக்கவும் வழிவகை செய்கிறது..
மேலும், குறைந்தபட்ச ஊதியச் சட்டம், 1948, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு குறித்த நேரத்தில் ஊதியம் வழங்குவதை உறுதி செய்கிறது.
மேலும், பல்வேறு பொருளாதாரத் துறைகளில் பெண்களுக்கு ஆதரவளிப்பதற்காக கீழ்க்கண்ட சட்டங்கள் இயற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன:
மகப்பேறு நலச் சட்டம், 1961, மகப்பேறு பயன் (திருத்தம்) சட்டம், 2017-ன் மூலம் திருத்தப்பட்டபடி, பெண் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வகை செய்கிறது. 50 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் உள்ள நிறுவனங்களில், குழந்தைகள் காப்பக வசதியும் உள்ளது. ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை 12 வாரங்களிலிருந்து 26 வாரங்களாக அரசு உயர்த்தியுள்ளது. இதில் எதிர்பார்க்கப்படும் பிரசவ தேதிக்கு எட்டு வாரங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு பெண்ணுக்கு ஒதுக்கப்பட்ட வேலையின் தன்மையைப் பொறுத்து, முதலாளியும் பெண்ணும் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளும் அத்தகைய காலத்திற்கு வீட்டிலிருந்து வேலை செய்ய சட்டம் வழிவகை செய்கிறது.
சுரங்கச் சட்டம், 1952-ன் கீழ், பெண் தொழிலாளர்களின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் மற்றும் போதுமான வசதிகள், பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகளை செய்து கொடுத்து, திறந்தவெளி சுரங்கங்களில் காலை 6 முதல் இரவு 7 மணி வரையிலும், தொழில்நுட்பம், மேற்பார்வை மற்றும் மேலாண்மைப் பணிகளில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் மகளிரை பணியமர்த்த அரசு அனுமதித்தது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திருமதி ஷோபா கரந்தலஜே இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
**************
MM/AG/KV
(Release ID: 2040584)