வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
அமிர்தக் காலத்திற்கான பாதைகள்
Posted On:
01 AUG 2024 1:15PM by PIB Chennai
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 12வது அட்டவணையின்படி, நகர்ப்புற திட்டமிடல் என்பது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் / நகர்ப்புற மேம்பாட்டுக் குழுமங்களின் பணியாகும். மத்திய அரசு, மாநிலங்களின் முயற்சிகளுக்கு திட்ட தலையீடுகள் / ஆலோசனைகள் மூலம் துணைபுரிகிறது. இது மாநிலங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குகிறது.
நகர்ப்புற திட்டமிடல் தொடர்பான உயர்மட்டக் குழு "அமிர்தக் காலத்திற்கான பாதைகள்: இந்திய நகரங்களின் எதிர்காலத்தைக் கற்பனை செய்தல் மற்றும் உணர்தல்" என்ற முதல் வரைவு அறிக்கையை 2023 ஏப்ரலில் சமர்ப்பித்துள்ளது. இக்குழுவின் பதவிக்காலம் 31.07.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நகரமயமாக்கல் மற்றும் மக்கள்தொகை வளர்ச்சியின் விரைவான வேகத்தைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் பின்வரும் வழிகாட்டுதல்கள் / துணை விதிகளை வெளியிட்டுள்ளது:
நகர்ப்புற மற்றும் பிராந்திய வளர்ச்சித் திட்ட உருவாக்கம் மற்றும் செயலாக்க வழிகாட்டுதல்கள், 2014
கட்டமைப்புக்கான மாதிரி விதிமுறைகள்– 2016
நகர்ப்புற திட்டமிடல் சூழலியலை வலுப்படுத்த அமைச்சகம் திட்ட தலையீடுகள் மூலம் செயல்பட்டு வருகிறது. நகர்ப்புற திட்டமிடல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு மாநிலங்களை ஊக்குவிப்பதற்காக, நிதி அமைச்சகத்தின் செலவினத் துறையின் மூலதன முதலீட்டிற்காக மாநிலங்களுக்கு சிறப்பு உதவிக்கான திட்டங்கள் தொடங்கப்பட்டன. நகர்ப்புற திட்டமிடலை ஒரு கருவியாகப் பயன்படுத்தி நிலப் பயன்பாடு, நிலையான வளர்ச்சி, மலிவு மற்றும் வருவாய் ஈட்டுதல் ஆகியவற்றில் செயல்திறனை மேம்படுத்துவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு. டோகான் சாஹு இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2040045
*********************
BR/KV
(Release ID: 2040578)
Visitor Counter : 40