ஊரக வளர்ச்சி அமைச்சகம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் புவிக் குறியீட்டு விதிகளில் மாற்றம்
प्रविष्टि तिथि:
30 JUL 2024 4:59PM by PIB Chennai
தேசிய நடமாடும் கண்காணிப்பு அமைப்பு (NMMS) 2021-22ம் நிதியாண்டில் தொடங்கப்பட்டது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, ஜியோ டேக் எனப்படும் புவிக் குறியீடு செய்யப்பட்ட, நேர முத்திரையிடப்பட்ட, தொழிலாளர்களின் வருகைப் பதிவை தேசிய நடமாடும் கண்காணிப்பு அமைப்பின் என்எம்எம்எஸ் செயலி மூலம் பதிவு செய்வது 2023 ஜனவரி 1 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது பணம் செலுத்துவதை விரைவாகச் செயல்படுத்துவதோடு, திட்டத்தின் மேற்பார்வையை அதிகரிக்கிறது. என்எம்எம்எஸ் செயலி மூலம் தொழிலாளர்களின் புவி-குறியிடப்பட்ட புகைப்படங்களுடன் வருகையைப் பதிவு செய்வது பணியிட மேற்பார்வையாளர்களின் பொறுப்பாகும்.
முதல் வருகையையும் புகைப்படத்தையும் 4 மணி நேரத்திற்குப் பிறகு இரண்டாவது புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்ய உதவும் வகையில் என்எம்எம்எஸ் செயலி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
வருகைப்பதிவை பதிவேற்றம் செய்ய முடியாத விதிவிலக்கான சூழ்நிலைகளில், கையால் வருகைப்பதிவை பதிவேற்றம் செய்ய மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளருக்கு (DPC) அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் திரு கமலேஷ் பாஸ்வான் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
*****
(रिलीज़ आईडी: 2040425)
आगंतुक पटल : 86