பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆயுதப்படை தலைமையக காவலர் அல்லாத சேவைகளின் 83-வது தின கொண்டாட்டம்: பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பங்கேற்பு

Posted On: 01 AUG 2024 2:17PM by PIB Chennai

 விரைவாக மாறிவரும் இன்றைய காலகட்டத்தில், பாதுகாப்பு அமைச்சகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்களை திறம்பட செயல்படுத்துவதற்கு ஆயுதப்படை தலைமையகத்தின் காவலர் அல்லாத சேவைகளில் உள்ள வீரர்கள் தங்களது திறன்களை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். 2024, ஆகஸ்ட் 01 அன்று புதுதில்லியில் நடைபெற்ற 83-வது ஆயுதப்படை தலைமையக காவலர் அல்லாத சேவைகளை தினத்தில் அவர் உரையாற்றினார்.

 

தற்சார்பு நிலையை அடைவதற்கான முயற்சிகள் மற்றும் வீரர்களின் நலனுக்கு பங்களிப்பது உள்ளிட்ட தற்போதைய பணிகளை முன்னெடுத்துச் செல்வதில் ஆயுதப்படை தலைமையக காவலர் அல்லாத  சேவை பணியாளர்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பை பாராட்டினார். " ஆயுதப் படைகளுக்கும் அரசின் பிற துறைகளுக்கும் இடையே ஒரு முக்கியமான இணைப்பாக இருக்கிறீர்கள்.  என்று கூறினார். மேம்பட்ட செயல்திறனுக்காக திறன்களை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது, "என்று அவர் கூறினார்.

 

"கடந்த ஐந்து ஆண்டுகளில் பாதுகாப்பு அமைச்சகத்தில் முன்னெப்போதும் இல்லாத சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், மேலும் பல துறைகளில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். பாதுகாப்புத்துறை சாதனைகள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்றும் குழுவாக செயல்பட்டதன் காரணமாக இது நடந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

ஆயுதப்படை தலைமையகத்தின் காவலர் அல்லாத  சேவை பணியாளர்களின் பணி முன்னேற்றத்திற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு பாதுகாப்புத் துறையை அமைச்சர் வலியுறுத்தினார். "அவர்களின் திறன்கள் அதிகரிக்கும் போது, அவர்களின் பணி முன்னேற்றம் மேம்படும் என்றும், மேலும் இந்த பணியாளர்கள் ஆயுதப்படைகளுக்கு சிறந்த ஆதரவை வழங்க முடியும், நமது பாதுகாப்பு முறையை வலுப்படுத்த முடியும் என்றம்  தெரிவித்தார்.

 

நேர்மை, ஒழுக்கம் மற்றும் சீரான தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு திரு ராஜ்நாத் சிங் பணியாளர்களை கேட்டுக் கொண்டார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2040107

***

IR/RS/KR/DL


(Release ID: 2040400) Visitor Counter : 60