பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குடும்ப ஓய்வூதிய குறைகளைத் தீர்ப்பதற்கான ஒரு மாத கால சிறப்பு முகாமின் இறுதியில் 1737 குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன

प्रविष्टि तिथि: 31 JUL 2024 4:44PM by PIB Chennai

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறையின் 100 நாள் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக, குடும்ப ஓய்வூதிய குறைகளை தீர்ப்பதற்கான ஒரு மாத கால சிறப்பு முகாமை மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஜூலை 1 அன்று அன்று தொடங்கிவைத்தார்.

ஒரு மாத காலம் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில்  92 சதவீத குறைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1891 குடும்ப ஓய்வூதிய பிரச்சினைகளில், 1737 குறைகளுக்குத்  தீர்வு காணப்பட்டுள்ளன. மீதமுள்ளவை  முகாமிற்குப் பிந்தைய காலத்தில் தனிப்பட்ட அமைச்சகங்கள் / துறைகளால் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். இந்த முகாமில், 46 அமைச்சகங்கள் / துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் இருந்தன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039667

***

BR/KR/DL


(रिलीज़ आईडी: 2040323) आगंतुक पटल : 73
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Hindi_MP , हिन्दी