புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசியப் பசுமை ஹைட்ரஜன் இயக்கம் (NGHM)

Posted On: 24 JUL 2024 7:01PM by PIB Chennai

மத்திய அமைச்சரவை 4 ஜனவரி 2023 அன்று ரூ. 19,744 கோடி செலவில் தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்துக்கு ஒப்புதல் அளித்தது. 2030-ம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 5 மில்லியன் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதை இலக்காகக் கொண்டு, பசுமை ஹைட்ரஜன், அதன் வழிப்பொருட்களின் உற்பத்தி, பயன்பாடு, ஏற்றுமதிக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றுவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக கீழ்க்கண்ட அம்சங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன:

*ஏற்றுமதி, உள்நாட்டு பயன்பாட்டின் மூலம் தேவை உருவாக்கத்திற்கு வசதி செய்தல்;

*பசுமை ஹைட்ரஜன் மாற்றத்திற்கான உத்திசார் தலையீடுகள் (SIGHT) திட்டம். இதில் எலக்ட்ரோலைசர்கள் உற்பத்தி, பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கான சலுகைகள் அடங்கும்;


*பசுமை ஹைட்ரஜன் மையங்களை உருவாக்குதல்;

*உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு;

*விதிமுறைகள், தரநிலைகளின் வலுவான கட்டமைப்பை நிறுவுதல்;

*திறன் மேம்பாட்டுத் திட்டம்,

*பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் மக்கள் தொடர்புத் திட்டம்

*தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தில் 2024 - 25-ம் நிதியாண்டில் பல்வேறு செயல்பாடுகளுக்கு  ரூ. 600 கோடி செலவு செய்யப்படுகிறது.

*இந்த இயக்கம் 2030-ம் ஆண்டு முடிவதற்குள் ஒட்டுமொத்தமாக ரூ. 1 லட்சம் கோடி மதிப்புள்ள புதைபடிவ எரிபொருள் இறக்குமதியைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு பிரல்ஹத் ஜோஷி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

 

****


(Release ID: 2039857) Visitor Counter : 51