உள்துறை அமைச்சகம்
குற்றவியல் நீதி பரிபாலன முறையை செயல்படுத்தும் திட்டத்தின் இரண்டாம் கட்டம்
Posted On:
30 JUL 2024 4:29PM by PIB Chennai
நாட்டில் நிறுவப்பட்ட குற்றவியல் நீதி வழங்கலுக்கான தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் முதன்மையாக குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு கட்டமைப்பு மற்றும் அமைப்புகளை உள்ளடக்கியதாகும். அதாவது காவல்துறை, தடய அறிவியல் துறை, புலன் விசாரணை நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் ஆகியவற்றுக்கு இடையே தகவல் தொழில்நுட்ப செயல்பாடுகளை இது வழங்கி வருகிறது.
இந்த தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் தனித்து செயல்படும் அமைப்புகளாகும். குற்றவியல் நீதி பரிபாலன முறை செயல்படும் திட்டத்தின் இரண்டாம் கட்டம், தடையற்ற தரவு பரிமாற்றத்திற்காக இந்த தனித்த தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை ஒன்றிணைப்பதுடன், ஸ்மார்ட் காவல் முறைக்கான புதிய தொழில்நுட்பங்களையும் வழங்கும்.
காவல் துறை, சிறைச்சாலைகள், குற்ற வழக்கு தொடர்பு நீதிமன்றங்கள், தடயவியல் துறை ஆகியவற்றின் பல்வேறு தரவு உள்ளீட்டில் உள்ள பிழைகளைக் குறைப்பதன் மூலம் தரவு தரத்தை மேம்படுத்த இது உதவும்.
புலனாய்வுகளில் கிடைக்கக்கூடிய தரவு பகுப்பாய்வுகள் மற்றும் நவீன கருவிகளை திறம்பட பயன்படுத்த இயலும்.
முடிவெடுப்பதில் காகித பதிவுகளை நம்பியிருப்பதைக் குறைக்க உதவும். "ஸ்மார்ட் போலீசிங்" முறையை நோக்கி ஒரு மாற்றத்தை இது இயக்கும்.
வன்பொருள் (பயன்பாட்டு சேவையகங்கள் மற்றும் கிளையன்ட்-இறுதி அமைப்புகள்), மென்பொருள் புதுப்பிப்பு, மேம்பாடு மற்றும் மேலாண்மை, கட்டமைப்பு இணைப்பு, இயக்கம் மற்றும் பராமரிப்பு, விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவை இந்த இரண்டாம் கட்டத்தில் அடங்கும்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு. பண்டி சஞ்சய் குமார் இதனைத் தெரிவித்தார்.
******
PKV/RR/KR/DL
(Release ID: 2039854)
Visitor Counter : 40