நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிலக்கரி சுரங்கங்கள் ஏலம்

Posted On: 31 JUL 2024 3:48PM by PIB Chennai

நிலக்கரி சுரங்கங்களின் ஏலம் என்பது அரசு, தனியார் நிறுவனங்கள் பங்கேற்கக்கூடிய ஒரு தொடர்ச்சியான நடவடிக்கையாகும்.

நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்வதில் பின்பற்றப்படும் கொள்கையின்படி, அனைத்து நிலக்கரி சுரங்கங்களும் தற்போது ஏல விற்பனை மூலம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நிலக்கரியின் ஏற்றுமதியை அதிகரிக்கவும், இறக்குமதியைக் குறைக்கவும், உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தவும் பரிந்துறைகளை வழங்க 29.03.2019 அன்று நித்தி ஆயோக் (கனிமங்கள்) துணைத்தலைவர் தலைமையில், உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டது. நிலக்கரி கண்டறிதல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் படிப்படியாக வணிக நோக்கங்களுக்காக மாற்றப்பட வேண்டும் என்று உயர்நிலைக் குழு 2020-ம் ஆண்டு அறிக்கையை பரிந்துரைத்திருந்தது. இதனை அமைச்சகம் ஏற்றுக் கொண்டது.

மேலும், இந்த அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஆண்டுக்குப் பிறகு, அனைத்து ஏல  ஒதுக்கீடுகளும் வணிக நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படும் என்றும், ஒரு ஆண்டுக்குப் பிறகு, நிலக்கரி அமைச்சகத்தால் தீர்மானிக்கப்படும் விதிவிலக்கான சூழ்நிலைகளைத் தவிர, நேரடி ஒதுக்கீட்டு முறை விலக்கப்படும் என்றும், பொதுத்துறை நிறுவனங்கள் நிலக்கரி சுரங்க ஏலங்களில் பங்கேற்கலாம் என்றும் உயர்நிலைக் குழு பரிந்துரைத்தது.

சிங்கரேணி நிலக்கரி சுரங்க நிறுவனத்தை தனியார்மயமாக்கும் நோக்கில் நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடும் திட்டம் எதுவும் இல்லை.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

---

IR/KPG/KR/DL


(Release ID: 2039809) Visitor Counter : 75