சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

வாகனங்களை திரும்ப பெறும் கொள்கை

Posted On: 31 JUL 2024 1:36PM by PIB Chennai

நாடு முழுவதும் கடந்த 4 ஆண்டுகளில் 26,27,704 வாகனங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்  திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் எழுத்து மூலம் பதிலளித்துள்ள அவர், மத்திய மோட்டார் வாகன விதிமுறைகள் 1989-ன் பிரிவு 126-ல், வாகன உற்பத்தியாளர்கள் அல்லது இறக்குமதியாளர்கள், சம்பந்தப்பட்ட வாகனத்தின் தரத்தை பரிசோதிப்பதற்காக வாகனம் பற்றிய விவரங்களை பரிசோதனை அமைப்பிடம் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மோட்டார் வாகன விதி 1988 பிரிவு 110-ஏ-ன் படி, குறிப்பிட்ட வகை அல்லது அதன் பல்வேறு ரகங்களைச் சேர்ந்த மோட்டார் வாகனங்களை திரும்பப் பெறுமாறு வாகன உற்பத்தியாளர்களுக்கு உத்தரவிடும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருப்பதாகவும் அவர்  கூறியுள்ளார்.

உற்பத்தி நிலையிலேயே பழுதடைந்த வாகனங்களை திரும்பப் பெறும் விதிமுறையின்படி வாகன உற்பத்தியாளர்களே கடந்த 4 ஆண்டுகளில் 21,15,778 இருசக்கர வாகனங்களையும், 5,11,926 கார்களையும் திரும்பப் பெறுள்ளதாகவும் திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039503

***

MM/AG/KR



(Release ID: 2039656) Visitor Counter : 39